வைரமுத்து பெறப்போவது மன்னிப்பா? தண்டனையா? பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா

 

வைரமுத்து பெறப்போவது மன்னிப்பா? தண்டனையா? பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா

’தமிழை ஆண்டாள்’ எனும் தலைப்பில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரை சர்ச்சையை கிளப்பியது. பெண் தெய்வம் ஆண்டாள் மீது அவதூறு கிளப்பியதாக இந்து சமயத்தினர் கொந்தளித்தனர்.

வைரமுத்து பெறப்போவது மன்னிப்பா? தண்டனையா? பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா

இந்த விவகாரத்தில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கொளத்தூர் போலீசில், சமுதாய நல்லிணக்க பேரவை முருகானந்தம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனு தாக்கல் செய்திருந்தார். ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடயது அல்ல என்று வைரமுத்து சார்பில் வாதிட்டப்பட்டதால், வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. வழக்கை ரத்து செய்யக்கூடாது. புகாரில் முகாந்திரம் இருக்கிறது. வழக்குவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முருகானந்தம் சார்பில் வாதிடப்பட்டது.

வைரமுத்து பெறப்போவது மன்னிப்பா? தண்டனையா? பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா

இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை சந்திக்க இருப்பதாகவும், மனுவை வாபஸ் பெறுவதாகவும் வைரமுத்து சார்பில் சொல்லப்பட்டதால், மனுவை வாபஸ் பெற அனுமதித்தார் நீதிபதி.

2017ம் ஆண்டில், ஆண்டாள் கோயிலில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் , வைரமுத்து வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களுக்கும் கல் எறியவும், சோடா பாட்டில் வீச தெரியும். ஆனால் செய்ய மாட்டோம். அதற்காக இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் அமைதியாக போகமாட்டோம் என்று ஆவேசப்பட்டிருந்தார்.

வைரமுத்து பெறப்போவது மன்னிப்பா? தண்டனையா? பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா

அவர், வைரமுத்து மனுவை வாபஸ் பெற்றது குறித்து, தன்னை பழித்தவர்களையும் மன்னிக்க தயாராக இருக்கிறார் ஆண்டால் தாயார். நீதிபதி உருவத்தில் கடவுள் வந்து வைரமுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வைரமுத்துவை சிறையில் வைக்க வேண்டும் என்று இப்போது கூட ஆண்டாள் பக்தர்கள் நினைக்கவில்லை. வைரமுத்து ஆண்டாள் கோவிலுக்கு வரலாம்; மன்னிப்பு கேட்கலாம். ஆண்டாள் மட்டுமல்ல, அவரது கோடான கோடி பக்தர்களும்மன்னிப்பார்கள். வைரமுத்து பெறப்போவது மன்னிப்பா? தண்டனையா? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

வைரமுத்து பெறப்போவது மன்னிப்பா? தண்டனையா? பரபரப்பை ஏற்படுத்தும் எச்.ராஜா

யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்று வைரமுத்து கூறுவது பச்சை பொய். ஆண்டாள் நாச்சியார் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அர்சித்ததோடு தமிழாற்றுப்படை என்கிற போர்வையில் எம்பெருமான் ராமரை மனநோயாளி என்ற இந்து விரோதியே இந்த வைரமுத்து என்று சொன்ன பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ஜீயரின் குறித்த பேட்டியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.