தங்கை என்று சொல்லி மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

 

தங்கை என்று சொல்லி மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

முதல் இரவு நேரத்தில் மனைவியை எதிர்பார்த்திருந்த புது மாப்பிள்ளைக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார் என்பதும் அவர் இன்னொருவருக்கு மனைவி என்பதும் அண்ணன் என்று உறவு சொல்லி வந்தவர் அண்ணன் இல்லை அவர்தான் கணவர் என்பதும் தன் தங்கை என்று மனைவியை திருமணம் செய்து கொடுத்ததும் தெரிந்து அதிர்ச்சியானார். பணத்துக்காகவும் நகைக்காக இந்த மோசடி சம்பவம் நடந்துள்ளது.

தங்கை என்று சொல்லி மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் சோனு. இவரது மனைவி கோமல். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா பிரச்சனை இருந்து வருவதால் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கு சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில்தான் கணவனும் மனைவியும் இணைந்து ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். அதன்படி ஒரு கல்யாண புரோக்கர் இடம் சென்று தன் மனைவி கோமலை காட்டி, இவர் என் தங்கை இவருக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

தங்கை என்று சொல்லி மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

கல்யாணத் தரகர் சுமனும் ரவி என்பவருக்கு கோமலை பேசி முடித்துள்ளார். திருமணமும் முடிந்து விட்டது. அண்ணன் ஸ்தானத்தில் நின்று அனைத்தையும் சோனுவே செய்திருக்கிறார். முதலிரவு அன்று தன் அறைக்கு வரும் மனைவியை எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறார் ரவி. நெடுநேரமாகியும் கோமலை வராததால் வெளியே சென்று விசாரித்திருக்கிறார். அப்போதுதான் கோமல் வீட்டிலேயே இல்லை நகை பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார் என்று தெரியவந்திருக்கிறது. இதன் பின்னர் விசாரித்தபோதுதான் ரவிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சோனு தான் கோமலின் கணவன் என்பதும் பணத்துக்காக அண்ணன் தங்கை போல் நடித்து மோசடி செய்து வந்துள்ளது தெரியவந்தது. இதை அடுத்து ரவி போலீசில் கொடுத்த புகாரின் படி சோனு -கோமல் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்யாண புரோக்கர் சுமனும் இந்த காரியத்திற்கு உடந்தையாக இருந்தார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.