பெண் குழந்தையை பூபாதை அமைத்து பூ மழை தூவி வரவேற்ற குடும்பம்

 

பெண் குழந்தையை பூபாதை அமைத்து பூ மழை தூவி வரவேற்ற குடும்பம்

பெண் குழந்தை பிறந்தால் கொன்றுவிடும் அவலம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆண் குழந்தையை பெற்றெடுக்காததால் மனையை போட்டு அடித்துக்கொல்லும் கொடூரமும் அவ்வப்போது அரங்கேறித்தான் வருகிறது. ஆனாலும் பெண் குழந்தைகளை கொண்டாடி தீர்க்கும் குடும்பங்களும் இருக்கின்றனர்.

பெண் குழந்தையை பூபாதை அமைத்து பூ மழை தூவி வரவேற்ற குடும்பம்

ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் நிம்டி சந்தாவட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரஜாபத், தனது மனைவி சுகி தேவி, நாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்தபோது, தங்களது குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டார். அவரது குடும்பமே அத்தகைய மகிழ்ச்சியில் இருந்தது.

இந்த மகிழ்ச்சியை பெரிய அளவில் கொண்டாட நினைத்து, மனைவியின் சொந்த ஊரான ஹர்சோலவ்வில் இருந்து நிம்டி சந்தாவட்டாவுக்கு 40 கிலோ மீட்டர் தூரத்திற்கும், ஹெலிகாப்டரில் கிராமத்துக்கு அழைத்து வர முடிவு செய்து, அதற்குரிய அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று ஹெலிகாப்டரைக் கொண்டு வந்தனர்.

இதற்காகவே கிராமத்தில் ஹெலிபேட் அமைத்தனர். ஹெலிகாப்டரில் அழைத்து வருதல், ஆட்டம், பாட்டம், மேள தாளம் என கொண்ட்டாத்திற்கு மொத்தம் 4.5 லட்ச ரூபாய் செலவு செய்தனர்.

பெண் குழந்தையை பூபாதை அமைத்து பூ மழை தூவி வரவேற்ற குடும்பம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த இந்த நிகழ்வின் புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலாகியது. இந்நிலையில், தற்போது இன்னொரு குடுப்பமும் பெண் குழந்தையை கொண்டாடி தீர்க்கிறது.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்த ரோகித், தனது மனைவி பூஜா பிரசவத்திற்காக தாய்வீட்டிற்கு சென்று, அங்கே பெண் குழந்தை பெற்றதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். ரோகித்தின் குடும்பமும் அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி பிறந்த பெண் குழந்தை தற்போது 6 மாத குழந்தையாக இருக்கிறது. 6 மாத குழந்தையை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தது ரோகித் குடும்பம். பெண் குழந்தைக்கும் பெண் குழந்தையை பெற்ற மருமகளுக்கும் பூ பாதை அமைத்து அதில் நடந்து வரச்செய்து, நடந்து வரும்போது பூமழை தூவி உற்றாரும் உறவினர்களூம் மகிழ்ந்தனர்.