’’குற்றம் குற்றமே..முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’’

 

’’குற்றம் குற்றமே..முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’’

சட்டப்பேரவையில் நிகழ்த்திய ஆளுநர் உரையில் ஒன்றிய அரசு என்ற சொல் இடம்பெற்றதற்கு பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, ஒன்றிய அரசு கூறியதற்கும் பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

’’குற்றம் குற்றமே..முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’’

தமிழக பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து, ‘’மாநில உரிமைகள் என்ற பெயரில் அரசியலமைப்புச் சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டு அல்லது புரிந்துகொண்டே தவறாகப்பேசுவது என திமுகவினர் மக்களைக் குழப்பத்திலேயே வைத்திருக்கப் பார்க்கிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லப்படுவதை இடத்திற்கு ஏற்ப பொருள்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் மொழியின் அடிப்படை’’என்று குறிப்பிடுகிறார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற ‘ஒன்றிய அரசு’என்ற சொல்லுக்காக கண்டனத்தை தெரிவித்த நாராயணன் திருப்பதி, ஆளுநர் உரையில் இடம்பெறாத ஒரு சொல் குறித்தும் சுட்டிக்காடி தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

’’குற்றம் குற்றமே..முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’’

’’சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஜைன் உல் ஆப்தீன் ஹசன் என்ற வீரர் உருவாக்கிய சொல்லே “ஜெய் ஹிந்த்”. “இந்தியா வாழ்க / இந்தியாவுக்கு வெற்றி” என்பதை உணர்த்தும் சொல்லே “ஜெய் ஹிந்த்”! ராணுவத்தில் வணக்கம் என்பதற்கு மாற்றாகபயன்படுத்தப்படும் சொல்லே “ஜெய் ஹிந்த்”!

இந்தியாவின் பெருமை “ஜெய் ஹிந்த்”! ஆனால், அந்த சொல் இல்லாமல் ஆளுநர் உரை இருந்தது என்று புளகாங்கிதம் அடைந்து பூரிப்படைகின்றனர் தி மு கவினர். தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் குற்றம் குற்றமே. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய மாபெரும் குற்றம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியாவை சிறுமைபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.’’என்று வலியுறுத்தி இருக்கிறார்.