ஆரம்பித்தது அவர்தான்; ஆனால் முடித்து வைத்தது இவர்.. சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

 

ஆரம்பித்தது அவர்தான்; ஆனால் முடித்து வைத்தது இவர்.. சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லாமல் போனதை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தனர்.

ஆரம்பித்தது அவர்தான்; ஆனால் முடித்து வைத்தது இவர்.. சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

இதற்கு திமுகவினர், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகள் அனைத்தும் ஆளுநர் உரையில் இடம்பெற முடியாது. இது கூடவா தெரியாது என்று பதிலடி கொடுத்தனர். சட்டசபையிலும் நேற்று இது குறித்த விவாதம் நடந்தது.

’’தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகள் அனைத்தும் ஆளுநர் உரையில் இடம் பெறமுடியாது என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் முக்கிய அறிவிப்புகள் கூட இடம்பெறவில்லையே என்பதைத்தான் சுட்டிக்காட்டி கூறுகிறோம். குறிப்பாக காவிரி – கோதாவரி இணைப்பு மிக முக்கியமான திட்டம் . அது கூட ஆளுநர் உரையில் இடம்பெறவில்லையே என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்’’ என்று பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆரம்பித்தது அவர்தான்; ஆனால் முடித்து வைத்தது இவர்.. சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ‘’ ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் தான் ஆகுது. அதற்குள் காவிரி -கோதாவரியை இணைக்கவில்லையா என்று கேட்டால் எப்படி?’’என்று சொன்னதோடு அல்லாமல், ’’சென்னைக்கு கிருஷ்ணா நீரை கொண்டு வந்தது கருணாநிதிதான். அதே மாதிரி காவிரி -கோதாவரியையும் இணைத்து காட்டுவோம்’’ என்றார்.

உடனே எழுந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ‘’கிருஷ்ணா நீரை கருணாநிதி சென்னைக்கு கொண்டு வந்ததாக அமைச்சர் தெரிவித்தார். ஆனால் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர காரணமாக இருந்தது எம்ஜிஆர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநில முதல்வர்களுடன் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் எம்ஜிஆர். அதே போல புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தி சென்னைக்கு குடிநீர் கிடைக்கச் செய்தவர் ஜெயலலிதா’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய துரைமுருகன், ‘’ எம்ஜிஆர், என்டிஆர் ஒப்பந்தம் போட்டனர். ஆனால் 400 கிலோ மீட்டருக்கு கால்வாய் கட்டியது கருணாநிதி. ஆரம்பித்தது அவர்தான் ஆனால் முடித்து வைத்தது கருணாநிதி’’ என்றார்.