ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

 

ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

தடுப்பூசி போட கிராமத்திற்கு வரும் டாக்டர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் பார்த்து ஓடி ஒளிந்துகொள்வதும், ஊருக்குள் விடாமல் அடித்து உதைத்து அனுப்பிய சம்பவங்களும் முன்பெல்லாம் நடந்துள்ளன. இப்போதும் அந்த சம்பவங்கள் நடக்கின்றன.

ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

துரத்துக்கொண்டே ஓடிய பின்னர், கடைசியில் ஆறு வந்ததும், ‘இப்ப என்ன செய்வ? ஊசி போட்டுத்தான் ஆகணும்’ என்று அதிகாரிகள் சொல்ல, தொப்பென்று ஆற்றுக்குள் குதித்து, ’இப்ப என்ன செய்வ.. இப்ப என்ன செய்வ’ என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். தமிழக, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நிலை இருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை என்றும், அதிக அளவில் தடுப்பூசி வேண்டும் என்று மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்டு போராடிக் கொண்டிருக்கையில், அந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள பயந்து இன்னும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் காஞ்சஹரகள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொரோனா தடுப்பூசி போட சென்றபோது, ஆத்தாடி என்று கேட்டுவிட்டு ஓடும் வடிவேலு மாதிரி எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

வீடு வீடாக சென்று எடுத்துச்சொல்லி, இரண்டு நாட்களாக போராடியதில் 150 பேரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வைத்துவிட்டனர். இதற்கே நாக்கு தொங்கும் நிலைமை ஆகிவிட்டது அதிகாரிகளுக்கு. மிச்சருமிக்கும் 350 பேரையும் எப்படித்தான் ஒருவழிக்கு கொண்டு வரப்போகிறோமோ என்று தலையில் அடித்துக்கொண்டே திரும்பி சென்றிருக்கின்றனர். அடுத்த முறை அவர்கள் கிராமத்திற்குள் வரும்போது என்ன நடக்குமோ?