வீடு இல்லாத ஏழைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதிகள்..

 

வீடு இல்லாத ஏழைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதிகள்..

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் இணையதளத்தில் முன் பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

வீடு இல்லாத ஏழைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதிகள்..

இந்த இணையதளத்தில் முன் பதிவு செய்ய முதலில் ஆங்கில அறிவும், தொழில்நுட்ப அறிவும் வேண்டும், அடுத்து இண்டர்நெட் இணைப்பு கொண்ட ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர்கள் தேவை. அதனால், வீடு இல்லாத ஏழைகளுக்கு எல்லாம் இந்த வசதிகள் இல்லாததால் அவர்களால் கோவின் இணையதளத்தில் முன் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை என்று செய்திகள் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. கோவின் தளத்தில் பதிவு செய்ய முகவரி சான்று, செல்போன் எண் போன்றக்வையும் கட்டாயமில்லை என்று தெரிவித்திருக்கிறது.

வீடு இல்லாத ஏழைகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதிகள்..

மேலும், எல்லோருக்கும் வசதியாகத்தான் கோவின் தளத்தில் ஆங்கிலம் தவிர இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ள மத்திய அரசு,

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை, மாற்றுத்திறனாளி அட்டை என்று 9 விதமாக அடையாள அட்டைகளை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 9 அட்டைகளும் இல்லாதவர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

வீடு இல்லாத ஏழைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதி இல்லை என்கிற நிலை இல்லை. வீடு இல்லாதோருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறது.