’’கருணாநிதி ஆட்சி ஆரம்பம்…’’

 

’’கருணாநிதி ஆட்சி ஆரம்பம்…’’

சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வு விவகாரம் குறித்த விவாதம் எழுந்தது. ’’நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா?’’ என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பிய கேள்விக்கு, ’’நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம்’’ என்றார் முதல்வர் ஸ்டாலின்.

’’கருணாநிதி ஆட்சி ஆரம்பம்…’’

அவர் மேலும், ‘’டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’’ என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும்’’ என்றார்.

’’கருணாநிதி ஆட்சி ஆரம்பம்…’’

மேலும் முதல்வர் ஸ்டாலின், ‘’நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதில் பாஜக ஆதரவு தர தயாரா?’’என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து டுவிட்டர் மாரிதாஸ், ‘’முதல் கையெழுத்து நீட் ரத்து! ஒரே கையெழுத்து நீட் ரத்து என்று நீங்களும் உங்கள் மகனும் பேசினீர்கள்? பாஜக ஆதரவுடன் நீட் ரத்து என்று சொல்லியா தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்?’’ என்று கேட்டுவிட்டு,

’’கருணாநிதி ஆட்சி ஆரம்பம்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.