விக்ரம் வேதா சர்ச்சை: கொந்தளிக்கும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்குமா கூகுள்?

 

விக்ரம் வேதா சர்ச்சை: கொந்தளிக்கும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்குமா கூகுள்?

மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த பெரிய அளவில் ஹிட் ஆன படம் விக்ரம் வேதா. கடந்த 2017ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது. இந்த படத்தினால் கன்னட ராஜ்குமார் ரசிகர்கள் இப்போது கொந்தளித்து கிடக்கிறார்கள்.

விக்ரம் வேதா சர்ச்சை: கொந்தளிக்கும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்குமா கூகுள்?

விக்ரம் வேதா படம் தொடர்பான விபரங்கள் கூகுளில் உள்ளன. இப்படத்தில் ‘ஆப் பாயில்’ என்ற கேரக்டரில் நடித்தவரின் படத்திற்கு பதிலாக மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் படம் இடம்பெற்றுள்ளது. ராஜ்குமாரின் தோளில் ஒரு புறா அமர்ந்திருப்பது மாதிரி அப்படம் இருக்கிறது.

விக்ரம் வேதா சர்ச்சை: கொந்தளிக்கும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்குமா கூகுள்?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை போலவே கன்னடத்தில் ராஜ்குமார் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரை கன்னட எம்.ஜி.ஆர். என்றே பலரும் அழைக்கின்றனர். பலரும் ராஜ்குமாரை தெய்வமாகவே வணங்கி வருகின்றனர். அத்தனை செல்வாக்கு மிகுந்த மனிதர் என்பதால்தான், சந்தன கடத்தல் வீரப்பன் அவரை கடத்தியபோது கர்நாடகமே கதறி துடித்தது.

அப்படிப்பட்டவரின் படத்தை இப்படி செய்தால் பொறுத்துக்கொள்வார்களா? நடிகர் ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், தயவுசெய்து விக்ரம் வேதா தமிழ் கூகிள் பக்கத்தில் எங்கள் டாக்டர் ராஜ்குமாரின் புகைப்படம் வேறொரு பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது, அதை உடனே நீக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதன்பின்னர் விபரம் தெரிந்து ராஜ்குமார் ரசிகர்கள் கொந்தளித்தனர். கூகுள் நிறுவனம் உடனே படத்தை நீக்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர். கன்னட திரையுலகினரும் கூகுளை கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.