• April
    07
    Tuesday

Main Area

Main



டிஜிட்டல் இந்தியாதான்... ஆனாலும் 28 ஆயிரம் கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை....

 Sanjay Dhotre
Sanjay Dhotre

நம் நாட்டில் சுமார் 28 ஆயிரம் கிராமங்களில் இன்னும் மொபைல் நெட்வொர்க் இல்லை என மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்

நம் நாட்டில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மொபைல் நெட்வொர்க்தான். பரவலான மொபைல் நெட்வொர்க் தகவல்தொடர்பை எளிமையாக மற்றும் வேகமாக மாற்றி விட்டது. செல்போன் ஒருவரின் உள்ளங்கைக்குள் உலகை கொண்டு வந்து விட்டது. இன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செல்போன் பயன்பாடு பரவலாக உள்ளது. தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை  செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

mobile-network.jpg

அதேசமயம் மறுபக்கம் நாட்டில் பல ஆயிரம் கிராமங்களில் இன்னும் மொபைல் நெட்வொர்க் வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய அரசே தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொலைத்தொடர்பு இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே பதில் அளிக்கையில் கூறியதாவது: நம் நாட்டில் 27,721 கிராமங்களில் இன்னும் செல்போன் இணைப்பு கிடையாது. தொலைதூரம் மற்றும் கடினமான நிலப்பரப்பு, மக்கள் தொகை குறைவாக கொண்ட பல்வேறு பகுதிகள் மற்றும் வணிக ரீதியாக மொபைல் சேவைக்கு சாத்தியமில்லாத செயல்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை.

mobile-network.jpg1.jpg

அதிகபட்சமாக ஒடிசாவில் 6,549 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் வசதி இல்லை. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 2000 முதல் 3000 கிராமங்களில் செல்போன் இணைப்பு இல்லை. அதேசமயம் அரியானாவில் ஒரே ஒரு கிராமத்தில் மட்டுமே மொபைல் நெட்வொர்க் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.மொபைல் நெட்வொர்க் இல்லாத கிராமங்களில் மொபைல் கவரேஜ் வழங்க அரசாங்கமும்,தொலைத்தொடர்பு நிறுவனங்களும் படிப்படியாக வழங்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உதாரணமாக இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2,355 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில் 2.217 மொபைல் டவர்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.