இந்தியாவின் பெரும் சோகம்: வேதனையை தெரிவித்த பிரதமர், குடியரசுத்தலைவர்

 

இந்தியாவின் பெரும் சோகம்:  வேதனையை தெரிவித்த பிரதமர், குடியரசுத்தலைவர்

இன்று இந்தியாவுக்கு நேர்ந்த பெரும் சோகமாக பறக்கும் மனிதர் என்று அழைக்கப்படும், முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங்(91) கொரோனாவால் உயிரிழந்தார். மில்கா சிங்கின் திடீர் மரணத்தினால் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களும், அவரின் போராட்டங்களையும், வெற்றியையும் பாடமாக எடுத்துக்கொண்டு நடை போட்டுக்கொண்டிருப்போரும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

இந்தியாவின் பெரும் சோகம்:  வேதனையை தெரிவித்த பிரதமர், குடியரசுத்தலைவர்

ரசிகர்களால் இந்தியாவின் பறக்கும் மனிதர் என புகழப்படும் மில்கா சிங், 1956, 1960, 1964 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றவர். 60ல் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ஒலிம்பிக் பதக்கம் நழுவினாலும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4வது இடம் பிடித்தார். 91 வயது முதுமையிலும் கூட, பலருக்கு ஊக்கம் கொடுத்து வந்தார் மில்கா சிங். ஆனால், பொல்லாத கொரோனா அவரது உயிரையும் பறித்துவிட்டது.

இந்தியாவின் பெரும் சோகம்:  வேதனையை தெரிவித்த பிரதமர், குடியரசுத்தலைவர்

கொரோனா 2வது அலையில் தொற்றுபாதித்து பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மில்காசிங், உடல்நிலை சீராக இருந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவின் பெரும் சோகம்:  வேதனையை தெரிவித்த பிரதமர், குடியரசுத்தலைவர்

ஐசியூவில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் அவர்களும் சில தினங்களுக்கு முன்னர்தான் கொரோனாவால் உயிரிழந்தார். இந்திய வாலிபால் அணியில் கேப்டனாக இருந்த அவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது அபிமானிகள் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், மில்கா சிங்கின் உயிரையும் கொரோனா பறித்தது.

இந்தியாவின் பெரும் சோகம்:  வேதனையை தெரிவித்த பிரதமர், குடியரசுத்தலைவர்

மில்கா சிங்கின் மறைவுகுறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘’விளையாட்டின் ஐகான் மில்கா சிங்கின் மறைவு என் இதயத்தை வருத்தத்தினால் நிரப்பி இருக்கிறது. மில்கா சிங்கின் போராட்டங்களின் கதையும், அவரது குணத்தின் வலிமையும் இந்த தலைமுறை இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரின் மறைவால் வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், மில்கா சிங்கின் எண்ணற்ற அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

’’எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடம் பிடித்திருக்கும் ஸ்ரீ மில்கா சிங்கின் மறைவினால் நாம் ஒரு மகத்தான விளையாட்டு வீரரை இழந்துவிட்டோம். அவரது ஆளுமைதான் மில்லியன் கணக்காணவர்களை அவரை நேசிக்க வைத்தது. மில்கா சிங்கின் மறைவு அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும்.

நாட்டின் வளர்ச்சி பற்றி அவர் அதிக அக்கறையும் எண்ணற்ற கனவுகளையும் கொண்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னர்தான் நான் மில்கா சிங்கிடம் பேசினேன். ஆனால், அதுதான் எங்கள் கடைசி உரையாடலாக இருக்கும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை’’ என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி .

மேலும், ‘’மில்கா சிங்கின் வாழ்க்கை சிங்கின் பயணத்தில் இருந்து வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் நிறைய கற்று பலம் பெறுவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் உலகம் எங்கிலுமிருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது இரங்கல்’’ என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.