நடிகை சுவாதிலேகா சிகிச்சை பலனின்றி காலமானார்

 

நடிகை சுவாதிலேகா சிகிச்சை பலனின்றி காலமானார்

பழம்பெரும் நடிகை சுவாதிலேகா சென்குப்தா(71) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலாமானார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நடிகை சுவாதிலேகா சிகிச்சை பலனின்றி காலமானார்

பிரபல பெங்காலி நடிகை சுவாதி லேகா சென்குப்தா. நாடக உலகில் நடித்து வந்த சுவாதி லேகா சென்குப்தா, 1984 ஆம் ஆண்டில், சத்யஜித் ரேயின் ’கரே பியர்’படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மித்ரா சாட்டர்ஜிக்கு ஜோடியாக பிமலாவாக, சுவாதிலேகாவின் நடிப்பை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

நடிகை சுவாதிலேகா சிகிச்சை பலனின்றி காலமானார்

சத்யஜித் ரேயின் ’கரே பைர்’, நந்திதா ராயின் ’பேலா ஷேஷ்’, ராஜ் சக்ரவர்த்தியின் ’தர்மஜுதா’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பெங்காலி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த சுவாதிலேகா, சுதீப் சக்ரவர்த்தியின் ’பரோஃப்’ படத்தில் கடந்த 2019 ல் நடித்திருந்தார். இதுதான் அவரது கடைசிப்படம்.

திரையுலகில் இருந்து விலகி, தனது கணவர் ருத்ரபிரசாத் சென்குப்தா, மகள் சோஹினி ஆகியோரால் நடத்தப்பட்ட நந்திகர் நாடக குழுவில் தீவிரமாக இருந்தார்.
நாடக உலகில் இவர் ஆற்றிய சேவைக்காக 2011ல் சங்க நாடக அகாடமி விருதை வென்றார். நாடகத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக மேற்கு வங்க நாடியா அகாடமி விருதும் வழங்கப்பட்டது.

நடிகை சுவாதிலேகா சிகிச்சை பலனின்றி காலமானார்

வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீரக நோயாலும் அவதிப்பட்டு வந்த சுவாதிலேகா, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் புதன்கிழமை பிற்பகல் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகள் சோஹினி தெரிவித்துள்ளார்.

நடிகை சுவாதிலேகா சிகிச்சை பலனின்றி காலமானார்

சுவாதி லேகாவின் மரணம் பெங்காலி சினிமாவுக்கு, நாடக உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.