களிசாப்பிட்ட சசிகலா… விளாசித்தள்ளிய சி.வி.சண்முகம்

 

களிசாப்பிட்ட சசிகலா… விளாசித்தள்ளிய சி.வி.சண்முகம்

அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆதரவு திரட்டி வருகிறார் சசிகலா. இதனால் சசிகலாவிடம் பேசியவர்களை கூண்டோடு நீக்கம் செய்துள்ளனர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும். ஆனாலும் அதிமுக தொண்டர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் சசிகலா.

களிசாப்பிட்ட சசிகலா… விளாசித்தள்ளிய சி.வி.சண்முகம்

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும், அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைப்பதற்கு தடை போடவும் முடிவெடுத்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும், சசிகலாவுக்கு எதிராக மாவட்டம்தோறும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதை அடுத்து மாவட்டம் தோறும் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம் சசிகலாவை கடுமையாக சாடினார்.

களிசாப்பிட்ட சசிகலா… விளாசித்தள்ளிய சி.வி.சண்முகம்

‘’ அதிமுகவை மீண்டும் கைப்பற்றி கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடும் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த காலத்திலும் அதிமுகவில் இடமே இல்லை. தொலைபேசி வாயிலாக தான் அரசியலுக்கு வருவதாக நாடகம் நடத்தி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார் சசிகலா.

சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் ஜெயலலிதா வீண் பழியை சுமந்து சிறைக்குச் சென்றார். அந்த கொள்ளையால்தான் சசிகலா சிறைக்கு சென்று 4 வருஷம் களி சாப்பிட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை சசிகலா. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கும் கூட தகுதி இல்லாதவர்’’ என்று விளாசித் தள்ளினார்.