உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம்  கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மூன்றாவது பெரிய வைரமாகும்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம்  கண்டுபிடிப்பு

கடந்த 1095ம் ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்க நாட்டில் உலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாக இருந்தது.

இதன்பின்னர், 2015ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு கொண்டதாக இருந்தது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம்  கண்டுபிடிப்பு

இந்நிலையில் மூன்றாவதாக உலகின் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் போட்ஸ்வானா நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி அன்று அரசாங்கத்துடன் இணைந்து இயங்கும் டப்ஸ்வானா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. நாட்டின் தலைநகரான கபோரோனில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள ஜ்வெனெங் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம்  கண்டுபிடிப்பு

இந்த வைரத்தின் அளவு 1,098 காரட் அளவு கொண்டதாக உள்ளது. 73 மில்லி மீட்டர் நீளமும், 52மில்லி மீட்டர் அகலமும், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டிருக்கிறது இந்த வைரம்.

பல கோடி ரூபாய் மதிப்புமிக்க இந்த வைரம், கொரோனா வைரஸ் தொற்று முடிந்தபின்னர் ஏலத்துக்கு வருகிறது.