மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரானார் இந்தியர் சத்யா நாதெள்ளா

 

மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின் தலைவரானார் இந்தியர் சத்யா நாதெள்ளா

இந்தியாவை சேர்ந்த சத்யா நாதெள்ளா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஜான் தாம்சன், பில்கேட்ஸ் இருவர் மட்டுமே தலைவர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது சத்யா நாதெள்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின் தலைவரானார் இந்தியர் சத்யா நாதெள்ளா

மைக்சோசாப்ட் புதிய உருவாக்கமான விண்டோஸ் 11 வகையை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் புதிய குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சத்யா நாதெள்ளா.

இந்தியாவில் ஐதராபாத்தில் பிறந்தவர் சத்யா நாதெள்ளா. மணிபாலில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்துவிட்டு, 1988ல் தனது 21 வயதில் சிகாகோ சென்று வர்த்தக மேலாண்மை முதுகலை படித்தார்.

இவர் 28 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசாப் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகிறார். தனது 46வது வயதில் 2014ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமைசெயல் அதிகாரியாக பொறுப்பேற்றபோது, இத்தனை இளம் வயதில் உலகின் தகவல் தொழில்நுட்ப வல்லாதிக்க சத்தியான மைக்ரோசாப்டின் தலைமை பதவிக்கு வந்துள்ளார் என்று பாராட்டப்பட்டார்.

மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின் தலைவரானார் இந்தியர் சத்யா நாதெள்ளா

இந்நிலையில், அவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது, 2014ம் நிதியாண்டில் ஆண்டில் அவர் 599 கோடி ரூபாய் ஊதியம் பெற்றார். 2019ம் நிதியாண்டில் 305 கோடி ரூபாய் ஊதியம் பெற்றார் சத்யா நாதெள்ளா.

மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின் தலைவரானார் இந்தியர் சத்யா நாதெள்ளா

நாதெள்ளாவின் தலைமை பண்பும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சிகளும்தான் நிறுவனத்தின் உயர்வுக்கு காரணமாக அமைந்தது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.