இதுதான் ஸ்டாலின் அடித்த சிக்ஸர்… விளாசும் ராமதாஸ்

 

இதுதான் ஸ்டாலின் அடித்த சிக்ஸர்… விளாசும் ராமதாஸ்

பல்வேறு தரப்பினரும் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியும், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கிறது. இதையடுத்து அன்று கருணாநிதி செய்ததும் இன்று ஸ்டாலின் செய்ததும் என்று, ‘மதுவின் தீமை – அன்று பெருந்தலைவர்கள் சொன்னதும், செய்ததும்’ தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாசின் ஒரு பதிவு இது.

இதுதான் ஸ்டாலின் அடித்த சிக்ஸர்… விளாசும் ராமதாஸ்

அன்று நடந்தது குறித்து , ’’பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் 4 மாவட்டங்களில் 1937 – 38ஆம் ஆண்டில் மதுவிலக்கை நடைமுறைபடுத்தியவர் ராஜாஜி. 1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்வதென கலைஞர் முடிவு செய்ததை அறிந்த ராஜாஜி அவர்கள், 1971 ஜூலை 20 செவ்வாய்க்கிழமை மாலை கொட்டும் மழையில் கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு கருணாநிதி இல்லத்துக்குச் சென்றார். அப்போது, மதுவிலக்கை ரத்து செய்வது எதிர்கால சந்ததியினரை வெகுவாக பாதிக்கும் என கருணாநிதியிடம் மன்றாடினார். ஆனால் அதையும் மீறி தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு சாராயக் கடைகள் திறக்கப்பட்டன’’ என்று சொல்லியிருக்கும் ராமதாஸ்,

இதுதான் ஸ்டாலின் அடித்த சிக்ஸர்… விளாசும் ராமதாஸ்

’இன்று நடப்பது!’என்று தலைப்பிட்டு, ‘’தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் சூழலில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் நாள் மது விற்பனை ரூ.165 கோடியைத் தாண்டியுள்ளது. இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை மதுவிற்பனை ரூ. 127 கோடியை தாண்டிவிட்டது. இது தான் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சிக்ஸர் ஆகும்.’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.