’’இல்லத்தரசி கேட்கிறாள்… எங்கே மாதம் ஆயிரம்?’’

 

’’இல்லத்தரசி கேட்கிறாள்… எங்கே மாதம்  ஆயிரம்?’’

திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார் ஸ்டாலின். அவர் முதல்வர் ஆனதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவாகத்தான் இருக்கும் என்றும் பெண்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த வாக்குறுதியை முதல்வர் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

’’இல்லத்தரசி கேட்கிறாள்… எங்கே மாதம்  ஆயிரம்?’’

இந்நிலையில், ’’இல்லத்தரசி கேட்கிறாள்… எங்கே மாதம் ஆயிரம்?’’என்று கமெண்ட் அடித்திருக்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

கடந்த தேர்தலில்களில், ஆட்சிக்கு வந்தால், ‘’முதல் கையெழுத்து மதுவிலக்கு’’என்று பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின் . ஆனால், கொரோனா காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறக்கச்சொல்லி விட்டார். இதனால், சொன்ன பேச்சு எங்கே போச்சு? மாண்புமிகு ஸ்டாலின் ஜி’’என்று கேட்கிறர் சேகர்.

’’இல்லத்தரசி கேட்கிறாள்… எங்கே மாதம்  ஆயிரம்?’’

மேலும், ’’ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் தமிழகத்திற்கு 6000 டன் ஆக்சிஜன் தந்த மத்திய அரசு எங்கே? டாஸ்மாக் திறந்து தாய்மார்களின் ஆக்சிஜனை எடுக்கும் தமிழக அரசு எங்கே? குடிநீருக்காக ரூ3960 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. ஆனால், குடியை கெடுக்கும் சாரய கடையை திறந்து லாபம் பார்க்கிறது மாநில அரசு.’’என்று தமிழக அரசினை விமர்சமம் செய்திருக்கிறார்.

டாஸ்மாக்கடை திறக்க ஸ்டாலின் உத்தரவிட்டது குறித்து மேலும்,
தந்தை: ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார். அதனால் இறைவனை காண மக்களை ஏழையாகவே வைத்திருந்தார்.

மகன்: தாய்மார்களின் சிரிப்பே அரசின் சிறப்பு என்றார். ஆனால் டாஸ்மாக்கை திறந்து அவர்களின் சிரிப்பை களவாடிவிட்டார். என்றும் பதிவிட்டிருக்கிறார் சேகர்.