அனைவரும் ஒன்று சேருங்கள்… எடப்பாடி பழனிச்சாமி

 

அனைவரும் ஒன்று சேருங்கள்… எடப்பாடி பழனிச்சாமி

“உடம்பில் ஆங்கிலேய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” எனும் அறைகூவலாய் ஆங்கிலேய அரசுக்கு எதிரான முதல் பிரகடனமாம் ’ஜம்பு தீவு பிரகடனம்’ அறிவித்து, ஆங்கிலேயருக்கு எதிரான முதல் ஒருங்கிணைந்த போரை‌ முன்னெடுத்த மருது சகோதரர்களின் வீரத்தை வணங்குவதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடிபழனிச்சாமி.

அனைவரும் ஒன்று சேருங்கள்… எடப்பாடி பழனிச்சாமி

சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னர்களான மருது சகோதரர்களில் இளையவர் சின்ன மருது 1801ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார். இதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தனர் மருது சகோதரர்கள். 1847 ஆம் ஆண்டு நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான சிப்பாய் கலகத்திற்கு அரை நூற்றாண்டுகளுக்கும் முன்னரே மருது சகோதரர்களால் வெளியிடப்பட்ட ’ஜம்புத் தீவு பிரகடனம்’ தான் ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்தது என்று வரலாறு சொல்கின்றது.

அனைவரும் ஒன்று சேருங்கள்… எடப்பாடி பழனிச்சாமி

ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் எனும் அறிக்கையினை திருச்சி மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் சுவர்களில் ஒட்டினார் சின்னமருது. இந்த அறிக்கைதான் ’ஜம்புத் தீவு பிரகடனம்’ என்று அழைக்கப்படுகிறது. மருது சகோதரர்களின் இந்தப் போர்ப் பிரகடனம் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் எதிர்ப்பாக இருந்ததால் மருது சகோதரர்களை அழிக்க நினைத்தனர் ஆங்கிலேயர்கள்.

மருது சகோதரர்களின் ஜம்புத் தீவு பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்தான் இன்று. ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து 16.6. 1801ல் சின்னமருது ஜம்புத் தீவு பிரகடனம் செய்தார். இதனால், எழுத்தின் மூலம் வெள்ளையனை எதிர்த்த வீரத் தமிழன் என்று மருது சகோதரர்கள் போற்றப்படுகின்றனர்.

ஜம்புத்தீவு பிரகடன தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடிபழனிச்சாமி மேற்கண்ட பதிவினை வெளியிட்டிருக்கிறார்.