பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்கு… நெகிழவைத்த வைரமுத்து

பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்கு… நெகிழவைத்த வைரமுத்து

நாட்படு தேறல் மூலம் 100 பாடல்களை இலக்கு வைத்து செல்லும் வைரமுத்துவின் பாட்டுப்பயணத்தில், பூக்களை, அதன் வாழ்க்கையை மையமாக வைத்து இயற்றியிருக்கும் பாடல் குறித்து,

பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்கு… நெகிழவைத்த வைரமுத்து

நாட்படு தேறல்
பத்தாம் பாடல்
‘ நாளை ஒரு பூ மலரும் ‘
நாளை முன்னோட்டம்

மொட்டுவிடும் காலம் முதல்
பட்டுவிடும் காலம்வரை
ஒரு பூவின் சரித்திரம்

ஒரு பூ
பயணப்படும் வழியெல்லாம் பயன்படும்.

வாருங்கள்;
ஒரு பூவின் பின்னால் போகலாம்.

அது
ஞானத்தின் மறுகரைக்கே
நம்மை இட்டுச் செல்லலாம்.
என்று குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.

பூக்களை பற்றி எழுதியதால்தானோ என்னவோ தெரியவில்லை, இந்த ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த பூ விற்கும் பெண்கள் சிலருக்கு பொருளுதவி செய்திருக்கிறார் வைரமுத்து. அது குறித்து அவர்,

பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்கு… நெகிழவைத்த வைரமுத்து

ஊரடங்கில்
பூவும் வாழ்வும் வாடிப்போன
பூக்காரிகள் சிலருக்குப்
பொருள் கொஞ்சம் கொடுத்தேன்

பண்புடையீர்!

உங்களைச்
சூழ்ந்திருக்கும் சமூகத்தை
ஆழ்ந்து பாருங்கள்

அற்ற வயிறும்
இற்ற உயிரும்
எத்துணையோ?

சற்றே உதவுங்கள்

சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு
சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு

என்று குறிப்பிட்டிருக்கிறார்.