உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு; தொற்று பரவாமல் இருக்க எப்படி சமைக்க வேண்டும்

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு; தொற்று பரவாமல் இருக்க எப்படி சமைக்க வேண்டும்

ணவுப்பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது. இதனால், சமையல் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது.

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு; தொற்று பரவாமல் இருக்க எப்படி சமைக்க வேண்டும்

உணவுப்பொருட்கள், இறைச்சியை சரியான வெப்பநிலையில் சேமித்து வைத்தால்தான் கெட்டுப்போகாமல் இருக்கும். அப்போதுதான் அவற்றுக்கு நுண்ணுயிரிகளால் பாதிப்பு வராமல் இருக்கும் என்கிறது. மேலும், விரைவில் கெட்டுப்போக்கும் உணவுகளை வைத்து ஐந்து டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு; தொற்று பரவாமல் இருக்க எப்படி சமைக்க வேண்டும்

சமைத்த இறைச்சி வகைகளை பிரிட்ஜுக்குள் அதிக நேரம் வைத்திருக்க கூடாது. அந்த உணவின் வாசம் ப்ரிட்ஜுக்குள் இருக்கும் மற்ற பொருட்களுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், அதிகமாக இறைச்சியை வாங்கிவந்து ப்ரிட்ஜுக்குள் வைத்து அவ்வப்போது எடுத்து சமைத்து சாப்பிடுவோர் கள் அப்படிப்பட்ட இறைச்சியையும் சமைத்த உணவையும் அருகருகே வைக்ககூடாது என்றும், கோழி, முட்டை, இறைச்சி மற்றும் மீன், நண்டு, இரால் போன்ற கடல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் இருக்கலாம். சமைத்த உணவோடு வைத்திருந்தால் தொற்று ஏற்பட காரணமாகிவிடும் என்றும் அறுவுறுத்தியிருக்கிறது.

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு; தொற்று பரவாமல் இருக்க எப்படி சமைக்க வேண்டும்

மீன், இறைச்சி, முட்டை, கோழி உணவுகளை சமைக்கும்போது குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடாது. இந்த நிறத்தில் இருந்தால் குழம்பு நன்றாக வேகவில்லை என்று அர்த்தம். அதனால் குழம்பு நன்றாக கொதித்து வெந்தால்தான் மீன், இறைச்சியில் உள்ள நுண் கிரிமிகள் உயிரிழக்கும். பொதுவாக 70 டிகிரி வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவுதான் நன்றாக சமைக்கப்படும் உணவாகும் என சமையல் நிபுணர்களின் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு; தொற்று பரவாமல் இருக்க எப்படி சமைக்க வேண்டும்

சமையைல் பொருட்களை மட்டுமல்லாமல் சமையல் அறையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கரப்பான் பூச்சி உள்ளிட்ட பூச்சிகளும்தொற்று தீங்கு விளைவிக்கு தொற்று நோய்களுக்கு காரணமாக இருக்கும். சுத்தமில்லாத நீரும் தொற்றுநோயை ஏற்படுத்தும் என்பதால் சுத்தமான நீரைக்கொண்டெ உணவு தயாரிக்க வேண்டும்.

உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு; தொற்று பரவாமல் இருக்க எப்படி சமைக்க வேண்டும்

உணவு தயாரிப்புக்கான பொருட்களை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். உணவு தயாரிக்க தேவையான பொருட்களை கழுவும்போதும் வடிகட்டிய நீரில்தான் கழுவ வேண்டும் என்று அறுவுறுத்தப்படுகிறது.