மருத்துவமனைக்கு ‘சீல்’..மக்கள் மருத்துவர் வீ.புகழேந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்

 

மருத்துவமனைக்கு ‘சீல்’..மக்கள் மருத்துவர் வீ.புகழேந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சதுரங்கப்பட்டினத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை,எளியோர்களுக்கு மிக மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார் வீ.புகழேந்தி. இதனாலேயே அவர் ’மக்கள் மருத்துவர்’என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். மருத்துவர் புகழேந்தியின் மருத்துவ சேவையைப் பாராட்டியும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காகவும், கடந்த மார்ச் மாதத்தில் துறை சார்ந்த சாதனையாளர் விருதை, மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

மருத்துவமனைக்கு ‘சீல்’..மக்கள் மருத்துவர் வீ.புகழேந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்

தற்போது வீ.புகழேந்தியின் மருத்துவமனைக்கு சீல்” வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருக்கிறார்.

விடுநர்-
மரு.வீ.புகழேந்தி,
2/3, முதலியார் தெரு,
சட்ராஸ்-603102
செங்கல்பட்டு.

பெறுநர்-
மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.

பொருள்-எனது மருத்துவமனை சீலிடப்பட்டதற்கு தொடர்பில்லாத சுகாதாரத்துறையை தற்போது மருத்துவமனையை ஆய்வு செய்ய தகவல் அனுப்பியது தொடர்பாக-

மருத்துவமனைக்கு ‘சீல்’..மக்கள் மருத்துவர் வீ.புகழேந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்

மதிப்பிற்குரிய ஐயா,

எனது மருத்துவமனை 22.5.21 அன்று திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அவர்களால்(வருவாய்துறை) சீலிடப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை முறையாக எனக்கு தெரிவிக்கப்படவில்லை. நான் அறிவது என்னவெனில் சீலிடப்படுவதற்கு முன் துணை இயக்குநர், சுகாதாரத்துறை, அவர்களின் அறிக்கை பெற்றே “சீல்”வைக்கும் நடவடிக்கையை பிறதுறை அதிகாரிகள் செய்திருக்க வேண்டும் என்பது விதியாக இருக்க அது கடைபிடிக்கபடவில்லை. மேலும் “சீல்” வைத்ததற்கும், சுகாதாரத்துறைக்கும் தொடர்பில்லை என்பதற்கான தகவல்கள் உள்ளன. (வட்டாட்சியர் தான் “சீல்”வைத்து, அதற்கான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பித்ததாக என்னிடம் கூறினார்.)”சீல்”வைத்தவர்கள் தான் சீலை எடுப்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

மருத்துவமனைக்கு ‘சீல்’..மக்கள் மருத்துவர் வீ.புகழேந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்

ஆக, “சீல்” வைத்ததற்கும், சுகாதாரத்துறைக்கும் தொடர்பில்லாத நிலையில், தற்சமயம் அவரை மருத்துவனையை மேற்பார்வையிட இருப்பது , செய்ய தவறிய சட்டரீதியான செயல்பாடுகளை, சீலிடுவதற்கு முன் கடைபிடித்திருக்க வேண்டிய விதிமுறைகளை மாற்று வழியில் செய்ய முயற்சிக்கின்ற திட்டமா? எனும் சந்தேகம் உள்ளதால், தயவு செய்து இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,
மரு.வீ.புகழேந்தி

சட்ராஸ்
14.6.21.