மாபியாக்களுக்கான அரசா இல்லை மக்களுக்கான அரசா? முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

 

மாபியாக்களுக்கான அரசா இல்லை மக்களுக்கான அரசா? முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் கட்டுமானத்துறையினரும் வீடு கட்ட நினைக்கும் மக்களும் கடுமையான அதிர்ச்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மாபியாக்களுக்கான அரசா இல்லை மக்களுக்கான அரசா? முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

ஊரடங்கிற்கு ஒரு சிமெண்ட் மூட்டை 370 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கில் 150 ரூபாய் திடீர் என உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிமெண்ட் மட்டுமல்லாது கட்டுமானப்பொருட்களின் விலையும் உச்சத்திற்கு சென்றுள்ளதால் எளியோர்களின் வீடு கட்டும் கடன் கேள்விக்குறியாகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினரோ திண்டாடி நிற்கின்றனர்.

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர், ‘’சிமெண்ட் விலை டில்லியில் ரூ350, ஆந்திராவில் ரூ 370, தமிழகத்தில் மட்டும் ஏன் ரூ 520?’’ என்று கேள்வி எழுப்புகிறார். அவர் மேலும், ‘’பெட்ரோல் விலை ஏற்றம் அனைவருக்கும் பொருந்தும். இருப்பினும் தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த விலை உயர்வு?’’என்கிறார்.

மாபியாக்களுக்கான அரசா இல்லை மக்களுக்கான அரசா? முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ100-ஐ தொட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும் என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கண்ட குற்றச்சாட்டினை குறிப்பிட்டு, ‘’மாபியாக்களுக்கான அரசா இல்லை மக்களுக்கான அரசா என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’’என்கிறார்.