’’இது நீங்க தான் பேசியதா ஸ்டாலின்? ’’- பழைய வீடியோவை காட்டி கேட்கும் பாஜக

 

’’இது நீங்க தான் பேசியதா ஸ்டாலின்? ’’- பழைய வீடியோவை காட்டி கேட்கும் பாஜக

மூன்று வாரடங்களாக மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை ஊரடங்கின் தளர்வு என்று கூறி, வரும் 14ம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கொரோனா காலத்தில் அரசு ஏன் இப்படி செய்கிறது என்று பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

’’இது நீங்க தான் பேசியதா ஸ்டாலின்? ’’- பழைய வீடியோவை காட்டி கேட்கும் பாஜக

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ’’ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வேலையில்லை, அவர்களின் சேமிப்பு கறைந்துவருகிறது. ஒருபுறம் அரசு தந்துவிட்டு, கொள்ளைபுறம் வழியாக அதை திரும்ப பெற டாஸ்மாகை திறப்பது கண்டிக்கத்தக்கது. குடியை திறந்து மக்களின் குடியை கெடுக்கும் அரசு!மக்களை பற்றி சிந்திக்காமல் மதுக்கடைகளை பற்றி சிந்திக்கும் ஸ்டாலின் அரசு’’என்கிறார். கொரோனா நிவாரணம் கொடுக்கும் அரசு மதுக்கடைகளையும் திறப்பதால் அவர் இப்படி சொல்கிறார்.

’’இது நீங்க தான் பேசியதா ஸ்டாலின்? ’’- பழைய வீடியோவை காட்டி கேட்கும் பாஜக

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது டாஸ்மாக் கடையை திறக்க அப்போதைய முதல்வர் எடப்பாடிபழனிசாமிக்கு எதிராக திமுக நடத்திய போராடத்தையும், அதுகுறித்து ஸ்டாலின் பேசிய வீடியோவையும் வெளியிட்டு, ’’இது நீங்க தான் பேசியதா ஸ்டாலின்? இல்லை உங்க பேச்சுக்கு பின் பேச்சு ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா? ஒரு கொள்கை, ஒரு நிலைப்பாடு என்பதில் திமுக எப்பொழுதாவது உறுதியாக இருந்துள்ளதா? ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, வந்த பின்பு வேறு பேச்சு’’ என்று கேட்கிறார்.

#குடியைக்கெடுக்கும்திமுக , #குடிகெடுக்கும்_ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக்குகளையும் அவர் பகிர்ந்திருக்கிறார்

’’இது நீங்க தான் பேசியதா ஸ்டாலின்? ’’- பழைய வீடியோவை காட்டி கேட்கும் பாஜக

அந்த வீடியோவில், ‘’மக்களை அதிகம் கூடக்கூடாது என்று சொல்வதும் அரசாங்கம்தான். மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதும் அரசாங்கம்தான். மக்கள் அதிகமாக கூடக்கூடாது என்று சொல்லிவிட்டு மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டிருக்கிறது அரசு. அரசாங்கம் போட்ட சட்டத்தை அரசாங்கமே மீறுகிறது. எந்த நோய்தொற்று அதிகம் பரவக்கூடாது என்று நினைக்கிறோமோ அது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையினாலேயே பரவப்போகிறது.

’’இது நீங்க தான் பேசியதா ஸ்டாலின்? ’’- பழைய வீடியோவை காட்டி கேட்கும் பாஜக

மே 7ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிவது என்று திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் முடிவு செய்திருக்கிறது. மே7ம் தேதி காலையில் 10 மணி அளவில் அவரவர் வீட்டுக்கு முன்னாள் கூடி, அதிமுகவுக்கு எதிராக முழக்கமிடுங்க. அதிகபட்சம் 15 நிமிடங்கள் முழக்கமிடுங்கள். இது அரசியல் அல்ல. மக்கள் மீதான அக்கறையினால் செய்ய வேண்டியது. தமிழக அரசு அணியப்போகும் கருப்பு சின்னம் அதிமுகவின் கண்களை திறக்கட்டும்’’என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.