’’குடிகெடுக்கும் ஸ்டாலின்’’-கனிமொழிக்கு பாஜக பதிலடி

 

’’குடிகெடுக்கும் ஸ்டாலின்’’-கனிமொழிக்கு பாஜக பதிலடி

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஊரடங்கின் தளர்வாக திறக்க உத்தரவிட்டார். இதை திமுக கடுமையாக விமர்சித்தது.

’’குடிகெடுக்கும் ஸ்டாலின்’’-கனிமொழிக்கு பாஜக பதிலடி

டாஸ்மாக் திறந்ததற்கு எதிராக அவரவர் வீட்டுக்கு முன்னாள் நின்று கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்று திமுக தலைவர் அறிவித்தார். கனிமொழி எம்.பி. அதன்படி போராட்டம் நடத்தினார். அதுகுறித்து 7.5.2020ல் தனத டுவிட்டர் பக்கத்தில், ’’மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போது..’’என்று பதிவிட்டு, எடப்பாடிக்கு எதிரான தனது போராட்ட படங்களையும் பகிருந்திருந்தார்.

’’குடிகெடுக்கும் ஸ்டாலின்’’-கனிமொழிக்கு பாஜக பதிலடி

மேலும், #குடியைக்கெடுக்கும்அதிமுக #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹேஸ்டேக்குகளையும் அவர் பகிர்ந்திருந்தார்.

’’குடிகெடுக்கும் ஸ்டாலின்’’-கனிமொழிக்கு பாஜக பதிலடி

இந்நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில், கொரோனா ஊரடங்கில் தளர்வாக டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், ’’நாளை இதே போன்ற ஒரு போராட்டத்தை தமிழக அரசை எதிர்த்து நடத்துங்கள். உங்கள் தலைமையில் நான் பங்குபெறுகிறேன். தலைப்பு உங்களுடையதே!’’ என்று கடுமையாக கனிமொழியை விமர்சித்திருக்கிறார் தமிழக பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி.

’’குடிகெடுக்கும் ஸ்டாலின்’’-கனிமொழிக்கு பாஜக பதிலடி

அவர் மேலும், அன்று #குடியைக்கெடுக்கும்அதிமுக , #குடிகெடுக்கும்எடப்பாடி என்ற ஹேஸ்டேக்குகளை கனிமொழி பகிர்ந்திருந்ததற்கு எதிராக, #குடியைக்கெடுக்கும்திமுக , #குடிகெடுக்கும்ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக்குகளையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

இதையடுத்து, அன்று ஸ்டாலினுடன் நின்று கோஷம் எழுப்பி கொடி பிடித்த வைகோ எங்கே?இவர்களின் சாயம் வெளுக்கும் நேரம் வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்து ஒருமாதத்தில் வெளுத்தது தான் வெட்கக்கேடு. என்று நாராயணன் திருப்பதி பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், திமுகவினர் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.