பிறந்த மேனியுடன் நடிகை மீரா மிதுன்; கொந்தளிக்கும் காளி பக்தர்கள்

 

பிறந்த மேனியுடன் நடிகை மீரா மிதுன்; கொந்தளிக்கும் காளி பக்தர்கள்

மீரா மிதுன் என்றாலே சர்ச்சைகளும் சலசலப்புகளும்தான் என்றாகிவிட்டது. மாடலிங் துறையில் பலருடன் சர்சையில் சிக்கி போலீஸ், கோர்ட் படிகளில் ஏறினார் மீரா மிதுன். பிக்பாஸ் போட்டியிலும் ஏகப்பட்ட சலசலப்புகளை ஏற்படுத்தி இயக்குநர் சேரன் மீது பகீர் புகாரினை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமாவில் வாரிசு ஆதிக்கம் பற்றி பேசி, விஜய் – சூர்யா ரசிகர்களை கொந்தளிக்க வைத்தார்.

பிறந்த மேனியுடன் நடிகை மீரா மிதுன்; கொந்தளிக்கும் காளி பக்தர்கள்

’8 தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை மீரா மிதுன், அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் இல்லாததால், தன் சாயலில் சில நடிகைகள் இருப்பதால்தான், தனக்கு வாய்ப்பளித்தால் அந்த நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று நினைத்து, தான் பலிவாங்கப்படுவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கதறிக்கொண்டிருந்தார். குறிப்பாக த்ரிஷா, நயன் தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்தான் தனக்கு வரும் படங்களை தட்டிபறிப்பதாக குற்றம் சாட்டி வந்தார்.

தனக்கு வாய்ப்பு கொடுத்தால் அந்தப்படம் பெரிய அளவில் ஓடும் என்றும் சொல்லிப்பார்த்தார். வாய்ப்பு கொடுத்தால் படம் தியேட்டரை விட்டு ஓடும் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்தனரே தவிர, வாய்ப்புகள் கிடைத்தபாடில்லை.

பிறந்த மேனியுடன் நடிகை மீரா மிதுன்; கொந்தளிக்கும் காளி பக்தர்கள்

அண்மைக்காலமாக அவர் அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தனது முழு நிர்வாணப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மிஸ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் நடிகை ஆண்டிரியா முழு நிர்வாணமாக நடிக்கிறார் என்ற பேச்சு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது முழு நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பு தந்துள்ளார் மீரா மிதுன். ரசிக்க வேண்டிய ரசிகர்கள் மாறாக கொந்தளித்துள்ளனர். போட்டோ மட்டும் வெளியிடாமல் அதில் மீரா மிதுன் சொன்ன கருத்தில் காளியின் பெயரை பயன்படுத்தியதுதான் ரசிகர்கள் கொந்தளிக்க காரணமாக இருக்கிறது.

Kali’s nakedness shows that she has cast away illusion ; in her , the entire truth about life and death is revealed என்று மீரா மிதுன் சொல்லியிருப்பதை பார்த்துவிட்டு, விளம்பரம் தேடுவதற்காக நீங்கள் எதையும் செய்வீர்கள். அதனால் நிர்வாண படத்தை வெளியிடுங்கள். அதற்காக காளியுடன் சம்பந்தப்படுத்தி பேசாதீர்கள். உங்கள் விளம்பரத்திற்காக கடவுளுடன் விளையாட வேண்டாம் என்று ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.