Home அரசியல் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை

மூன்று வாரங்களாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கின் தளர்வாக திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை

இதனால், ஒரு பக்கம் கொடுத்து மறுபக்கம் பறிப்பதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்திருக்கிறார். அவர், ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்கிறார்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை

மேலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளை திறப்பது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை

அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதை தமிழக அரசு உணரவேண்டும் என்று அறிவுறுத்தும் ராமதாஸ்,

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை

ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த தி.மு.க. இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே என்று கவலை தெரிவிக்கிறார்.

அதே நேரம், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே.. ராமதாஸ் கவலை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...

உத்தரகாண்ட் எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட தமிழ்நாடு காவல் துறை!

பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்குப் பின் பல பள்ளி மாணவிகளும் தைரியமாக புகார் கொடுக்க முன்வந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திலுள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின்...

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? – எல்.முருகனுக்கு கே.என்.நேரு பதிலடி!

தமிழகத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை...

காரைக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – காவலர் பலி!

சிவகங்கை காரைக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் முதல் நிலை காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம்...
- Advertisment -
TopTamilNews