திமுகவுக்கு எதிராக குஷ்புவின் ’பாரத பேரரசு’முழக்கம்

 

திமுகவுக்கு எதிராக குஷ்புவின் ’பாரத பேரரசு’முழக்கம்

திமுக ஆட்சி அமைத்தது முதல் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வருகிறது. இதனால், மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரி? என்ற விவாதமும் ஏற்பட்டிருக்கிறது.

திமுகவுக்கு எதிராக குஷ்புவின் ’பாரத பேரரசு’முழக்கம்

இந்நிலையில், தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. அதனால்தான் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் ஒன்றிய அரசு என்று அழைத்தால், நாம் ’பாரத பேரரசு’ என்று அழைப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார் பாஜக பிரமுகர் குஷ்பு.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமைப்படுகின்றவர்கள், மத்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக, அதிகபட்ச நலன்களுக்காக ஒரு பகுதியாக இருந்து அனுபவித்து வருபவர்கள்தான். துரதிர்ஷ்டவசமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சி செய்தவர்களும், மத்திய அரசு என்றே சொல்லி வந்தார்கள். பல ஆண்டுகளாக எதிர்ப்பில் இருந்தபோதிலும், நாங்கள் எப்போதும் போலவே ’மத்திய அரசு’ என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஆனால், எங்கள் தமிழ் மாநிலத்தில், அழுக்கு அரசியல் நடக்கிறது. அதனால் அவர்களுக்கு புரியும் படியாக நாங்கள் ’பாரத பேரரசு’ என்று அழைக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுகவுக்கு எதிராக குஷ்புவின் ’பாரத பேரரசு’முழக்கம்

மேலும் அவர், தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி. வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.