கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

 

கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல டப்பிங் கலைஞர் கண்டசாலா ரத்னகுமார் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர், அதிலிருந்து குணமாகி, வீடு திரும்ப இருந்த நேரத்தில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

மறைந்த பழம்பெரும் பாடகர் -இசையமைப்பாளர் கண்டசாலா. அவரது மூத்த மகன் ரத்னகுமார்.

கடந்த 40 வருடங்களாக இவர் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு டப்பிங் கலைஞராக பணிபுரிந்து வந்தார். தமிழ், மலையாளர், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார்.

ரத்னகுமாரின் மகள் வீணா கண்டசாலாவும் டப்பிங் கலைஞராக இருக்கிறார். பாடகியாகவும் உள்ளார்.

கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

இவர் 8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் சாதனை படைத்திருக்கிறார்.

கொரோனா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனாவில் இருந்து குணமாகி வந்தார். வீடுதிரும்ப வேண்டிய நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக பாதிப்பு பிரச்சனை இருந்து வந்ததால், அவற்றாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று மாரடைப்பினால் உயிரிழந்தார்.

ரத்னகுமாரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.