திமுக அமைச்சர்கள் சொன்ன பதிலில் திருப்தியடையாத நெட்டிசன்கள்

 

திமுக அமைச்சர்கள் சொன்ன பதிலில் திருப்தியடையாத நெட்டிசன்கள்

தமிழக இந்து சமயநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், சென்னை எம்.பி. தயாநிதிமாறன் ஆகியோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்யும் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திமுக அமைச்சர்கள் சொன்ன பதிலில் திருப்தியடையாத நெட்டிசன்கள்

ஒரு ஆட்டோவில் முன் சீட்டில் டிரைவர் மற்றும் பின்சீட்டில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்கிற ஊடரங்கு விதிகள் இருக்கின்றன. தமிழக அரசே விதிகளை சொல்லிவிட்டு, அமைச்சர்களே விதிகளை மீறுவதாக என்று கடும் விமர்சனம் எழுந்தது.

சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்து நேற்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத்தான் மூன்று பேரும் ஒரே ஆட்டோவில் சென்றுள்ளனர்.

திமுக அமைச்சர்கள் சொன்ன பதிலில் திருப்தியடையாத நெட்டிசன்கள்

விதிமீறல் என்பது பற்றியெல்லாம் யோசிக்கமால், போட்டோவுக்கும் அவர்கள் போஸ் கொடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் போட்டு வறுத்தெடுக்கவும்தாம் தாங்கள் செய்தது தவறு என்பது தெரியவந்திருக்கிறது.

அது குறுகலான தெரு என்பதால்தான் ஆட்டோவில் சென்றோம் என்று அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் விடவில்லை நெட்டிசன்கள். குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றதாக சொல்கிறீர்கள்.. அப்படியே வைத்துக்கொள்வோம். அதற்காக விதிகளை மீற வேண்டுமா என்ன? நீங்களே விதிகளை வகுத்துவிட்டு நீங்களே மீறுவது எந்தவிதத்தில் நியாயம்? இரண்டு பேர் ஒரு ஆட்டோவில் சென்றிருக்கலாமே? இன்னொருவர் வேறூ ஒரு ஆட்டோவில் சென்றிருக்கலாமே. இல்லை அதே ஆட்டோவை வரவழைத்து மீண்டும் ஒருவர் பயணித்திருக்கலாமே என்றும் கேட்கின்றனர் நெட்டிசன்கள்.