‘’நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர்’’

 

‘’நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர்’’

நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

‘’நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர்’’

பிரபல நகைச்சுவை நடிகரும் கதை ஆசிரியரும் வசனகர்த்தா கிரேசி மோகன்(67) கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி அன்று மாரடைப்பால் மரணமடைந்தார் . நாடக உலகில் தனக்கென தனி இடத்தை வகுத்தவர் கிரேசி மோகன், திரை உலகிலும் அவர் அப்படித்தான். அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், இந்தியன், சின்ன வாத்தியார், அவ்வை சண்முகி உள்பட பல படங்களில் நகைச்சுவை கேரக்டரில் அவர் நடித்து அசத்தியிருக்கிறார்.

அவரது மறைவுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். கமல்ஹாசன் தனது இரங்கலில், ‘’ நண்பர் கிரேசி மோகன் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது.

‘’நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர்’’

கிரேசி என்பது அவருக்கு பொருத்தமில்லாதது. அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னை காட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன் சந்திரஹாசன் என்பது மாதிரி மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டிய வந்த நல்ல நட்பின் அடையாளமாக அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் கையில் கொடுத்து பிரியா விடை கொடுத்தோம். இதற்கு முடிவு என்பதே கிடையாது ஆள் இருந்தால் தான் நட்பா என்ன ? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும். அந்த அளவிற்கு நானும் துணையிருப்பேன்’’ என்று சொல்லியிருந்தார்.

கிரேசி மோகனின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளிலும் நண்பரை நினைவு கூர்ந்திருக்கிறார் கமல்.