விஷால் வீட்டு பத்திரங்கள் காணாமல் போனது எப்படி? ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

 

விஷால் வீட்டு பத்திரங்கள் காணாமல் போனது எப்படி? ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌவுத்ரி மீது நடிகர் விஷால் தி.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தான் நடித்து, தயாரித்த ’இரும்புத்திரை’ படத்திற்காக ஆர்.பி.சௌத்ரியிடம் வீட்டுப்பத்திரங்கள், பேங்க் செக் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுத்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார் விஷால். கடன் பணத்தை வட்டியுடன் திரும்ப கட்டிவிட்டு, ஆவணங்களை திரும்ப கேட்டபோது, ஆவணங்கள் எங்கே இருக்கின்றது என்று சொல்லி திரும்ப தராமல் இழுத்தடிப்பதாக விஷால் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

விஷால் வீட்டு பத்திரங்கள் காணாமல் போனது எப்படி? ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார் விஷால்.

விஷால் வீட்டு பத்திரங்கள் காணாமல் போனது எப்படி? ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

இதுகுறித்து ஆர்.பி.சௌத்ரி, ‘’இரும்புத்திரை படத்துக்காக என்னிடமும் திருப்பூர் சுப்ரமணியத்திடமும் பைனான்ஸ் வாங்கியிருந்தார் விஷால். பணம் வாங்கும்போது அதற்கு உத்திரவாதமாக சில டாக்குமென்ட்ஸ் கொடுத்திருந்தார். இரும்புத்திரை படத்துக்காக வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிட்டார் விஷால். எங்களுக்குள் எந்த நிலுவையும் இல்லை என்று விஷாலுக்கு கையெழுத்துப்போட்டு கொடுத்துவிட்டோம்.

விஷால் வீட்டு பத்திரங்கள் காணாமல் போனது எப்படி? ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

கடன் வாங்கும்போது கொடுத்த ஆவணங்களை கேட்டார் விஷால். அவை எங்கே இருக்கின்றது என்றே எங்களுக்கு தெரியவில்லை. என்று சொன்னோம். அதனால்தானே கையெழுத்து போட்டு எழுதி கொடுத்திருகிறோம் என்று சொன்னோம். ஆனால், நாளைக்கு அந்த பத்திரங்களை வைத்துக்கொண்டு ஏதாவது பிரச்சனை செய்வார்களோ என்று விஷால் பயப்படுகிறார்.

உண்மையிலேயே அந்த பத்திரங்கள் எங்கே இருக்கின்றது என்று தெரியவில்லை. ஆயுத பூஜை பட இயக்குநர் சிவக்குமார்தான் திருப்பூர் சுப்பிரமணியத்தின் கொடுக்கல் வாங்கல் விசயங்களை கவனித்து வந்தார். அவரிடம்தான் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை எல்லாம் கொடுத்து வைப்பார். அப்படித்தான் விஷால் சம்பந்தப்பட்ட பத்திரங்களையும், ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார்.

விஷால் வீட்டு பத்திரங்கள் காணாமல் போனது எப்படி? ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

கடந்த 2018ல் சிவக்குமார் மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டார். அதனால் அவர் ஆவணங்களை எல்லாம் எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இதுவரைக்கும் தேடிப்பார்த்தும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை விஷாலிடம் சொல்லிவிட்டோம். அவர் பயப்படதேவையில்லை. எந்த பிரச்சனையும் வராது. அவர் போலீசில் புகார் கொடுத்திருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். இது ரொம்ப சாதாரண மேட்டர்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், ஆவணங்களை வைத்து பிரச்சனை செய்வார்களோ என்கிற பயம் ஒருபக்கம் இருந்தாலும், மீண்டும் கடன் வாங்கவேண்டும் என்றால் பத்திரங்கள் தேவைப்படுமே என்பதுதான் விஷாலின் கவலையாக இருக்கிறது என்கிறார்கள் அவரது தரப்பினர்.