ஓய்வெடுக்கும் யானை கூட்டத்தின் அழகு; வைரலாகும் வீடியோ

 

ஓய்வெடுக்கும் யானை கூட்டத்தின் அழகு; வைரலாகும் வீடியோ

காட்டுக்குள் ஓய்வெடுக்கும் யானை கூட்டத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோவும் வைரலாகி வருகிறது. கரூர் காங்கிரம் எம்.பி. ஜோதிமணியும் தனது முகநூல் பக்கத்தில் இந்த புகைப்படத்தினை பகிர்ந்திருக்கிறார்.

ஓய்வெடுக்கும் யானை கூட்டத்தின் அழகு; வைரலாகும் வீடியோ

சீனாவில் திசைமாறி 500 கிலோ மீட்டர் தூரம் சென்று நகருக்குள் சென்ற காட்டு யானைகள் மீண்டும் காட்டுக்குள் விரப்பட்டபோது திரும்பி வரும் வழியில் நடக்க முடியாமல் ஓய்வெடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோதான் அது.

யோனன் மாகாணத்தின் ஹூனிங் நகருக்குள் கடந்த 3ம் தேதி 15யானைகள் திடீரென புகுந்து வீதிகளில் நடமாடியதும் மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினரின் தீவிர முயற்சியில் காட்டுக்குள் இந்த யானைகள் 16ம் தேதி நடக்கத்தொடங்கின. யானைகள் மீண்டும் நகருக்குள் திரும்பாமல் தங்கள் இடத்தை நோக்கி செல்கின்றா என்று வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

திரும்பும் வழியில் நடக்க முடியாமல் அந்த யானைகள் கூட்டம் ஓய்வெடுக்கிறது. இந்த அழகான காட்சிதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.