தமிழுக்கும் இடமுண்டு! ராமதாஸ் மகிழ்ச்சி

 

தமிழுக்கும் இடமுண்டு! ராமதாஸ் மகிழ்ச்சி

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாதது வருத்தமளிக்கிறது என்று கடந்த 4ம் தேதி அன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

தமிழுக்கும் இடமுண்டு! ராமதாஸ் மகிழ்ச்சி

அவர் மேலும், கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால் ஆங்கிலம் தெரியாதவர்களால் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவின் இணைய தளத்தில் 11 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. சர்ச்சையை அடுத்து,கோவின் இணையதள பக்கத்தில் 12-வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவின் இணைய தளத்தில் படிப்படியாக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மாநில மொழிகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அடுத்த இரு தினங்களில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் இணையத்தளத்தில் தமிழ் மொழி இல்லாததை கடந்த 4-ஆம் தேதி சுட்டிக்காட்டினேன். இப்போது கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி வழி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்க! என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.