கோட்டையில் மலைபோல் குவிந்த கோப்புகள்

 

கோட்டையில் மலைபோல் குவிந்த கோப்புகள்

ஒரு வார காலம் கொரோனா தடுப்பு & பல்வேறு தொகுதி பணிகளில் நான் மதுரையில் இருந்தபோது கோட்டையில் என் அலுவலகத்தில் மலைபோல் கோப்புகள் குவிந்துவிட்டன. இச்சூழலை திருத்தி, கோப்புகளை விரைவாக செயல்படுத்த என் பொறுப்பிலுள்ள பணியாளர் & நிர்வாக சீர்திருத்த துறையின் மூலம் முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

கோட்டையில் மலைபோல் குவிந்த கோப்புகள்

சமூகவலைத்தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டிருந்தற்கு, ’’இதுக்கு கூடவா ட்விட்டரில் விளம்பரம் ? ’’என்று கேட்கிறர் ரேண்டம் என்பவர். ’’தங்களின் தற்பெறுமைகளை நிறுத்திவிட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு என்ன செயதீர்கள் என்று கூறுங்கள்’’ என்று கேட்கிறார் தேவ்.

இப்படி பலரும் அமைச்சருக்கு எதிரான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதே நேரம், ‘’இந்த காலகட்டத்தில் அசுரத்தனமான வேகத்தில் பணியாற்றினால் மட்டுமே ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பு என்பதால் ஊன் உறக்கமின்றி கால நேரம் பாராது கணப் பொழுதும் ஓயாது சுற்றிச் சுழன்று மகத்தான சேவை செய்யும் அண்ணன் பிடிஆர் தியாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்று சொல்கிறார் அரசை சகா. ’’எதிர்மறை விமர்சனம் வரக்கூடும் என்று கூட எதிர் பார்க்காமல் என் அலுவலகத்தில் கோப்புகள் மலை போல் குவிந்து விட்டது என்று புகைப்படத்தோடு பதிவிடுவது உண்மையில் பாராட்டுக்குரியது. எல்லா வகையிலும் வித்தியாசமாக தெரிகிறார் நம் நிதியமைச்சர். தொடரட்டும் தங்கள் வித்தியாச பயணம்.வாழ்த்துக்கள்.’’என்கிறார் சக மனிதன் டுடிட்டர் பதிவாளர்.

கோட்டையில் மலைபோல் குவிந்த கோப்புகள்

’’எங்கிருந்தாலும் கோப்புகளை பார்வையிட்டு உடனடியாக பரிசீலித்து முடிவெடுக்குமளவில் அனைத்தையும் onlineல் கொண்டு வந்துவிட்டால், இன்னும் வேகமாக செயல்பட முடியும். 2006 ஆட்சியில் 100% இசேவை நோக்கி நகர்த்தினோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகால தேக்கத்தினால் fileகளும் தேங்கியுள்ளது. சரி செய்வோம்’’ என்கிறார் ராசாளி.

அலுவலக பணியை அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டதால், ‘’அய்யா அலுவலக பணியை பொதுவெளியில் பகிரவேண்டாம். அது சற்று முதிர்ச்சி தன்மையற்ற செயலாக தோன்றுகிறது’’ என்கிறார் பாஸ்கர் மாறன்.

கோட்டையில் மலைபோல் குவிந்த கோப்புகள்

’’எல்லா இடங்களிலும் பட்டவர்த்தனமாக உண்மையை பேசுகிறார்.mla வாக அமைச்சராக தனக்குரிய கடமைகளை காலநேரமின்றி செய்கிறார். நாள்தோறும் இரவு இரண்டு மணிக்குமேல் உறங்கி அதிகாலையிலே விழித்து மக்கள் பணியாற்றுகிறார்.இதை உணர்ந்த எவரும் இப்படி ஓய்வின்றி உழைக்கிறாரே என்று வேதனைதான்படுவர்’’ என்று சொல்கிறார் வானதி கிருஷ்ணன்.

அமைச்சரின் டேபிள் முழுவதும் கோப்புகள்தான் குவிந்திருப்பதையும், ஒரு கம்யூட்டர் இல்லாததையும் சுட்டிக்காட்டி, ‘’நீங்க ஏன் சார் உங்க டேபிள்ல ஒரு கம்ப்யூட்டர் கூட வெச்சிக்கல. எல்லாத்தையும் முடிஞ்ச வரைக்கும் டிஜிட்டலைஸ் பண்ணிடலாம்ல..’’ என்று அறிவுறுத்துகிறார் ஒரு அன்பர்.

’’மதுரையில் ஒரு கிளை அலுவலகம் வைத்து கொள்ளலாம் + டிஜிட்டல் கை எழுத்து அமல் படுத்தலாம். உங்கள் பயண சுமையை குறைக்கும்’’என்றும் ஐடியா தருகிறார் பிரவீன்குமார் ராஜன்.