’’முதல்வருக்கு கட்சியினர் கட்டுப்படவில்லையா? ’’

 

’’முதல்வருக்கு கட்சியினர் கட்டுப்படவில்லையா? ’’

முதல்வர் ஸ்டாலினின் முப்பது நாள் ஆட்சி குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், பாஜக துணைத்தலைவரான அண்ணாமலையும் பாராட்டி இருப்பதுதான் அரசியல் அரங்கில் பரப்பரப்பாக பேசப்படுகிறது. முதல்வரை பாராட்டியிருக்கும் அதே நேரத்தில் திமுவினர் குறித்து புகார் சொல்லி இருக்கிறார்.

’’முதல்வருக்கு கட்சியினர் கட்டுப்படவில்லையா? ’’

முதல்வர் அங்கே இங்கே ஓடுகிறார்; அனைவரையும் பார்க்க முயற்சி செய்கிறார். இதையெல்லாம் தவறாக பார்க்க கூடாது. பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்லும் அண்ணாமலை, முதல்வரும் தடுப்பூசி விசயத்தில் பிரதமர் மோடியை பாராட்டுகிறார். எல்லோருக்குமான முதல்வராக இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். அதை அவர் செய்ய வேண்டும். அவரின் முப்பது நாள் ஆட்சிக்கு எங்கள் கட்சியினரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். தொடர்ந்து முதல்வருக்கு பாஜக ஆதரவு அளிக்கும். இன்னும் அவர் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்று நெகிழும் அண்ணாமலை,

’’முதல்வருக்கு கட்சியினர் கட்டுப்படவில்லையா? ’’

முதல்வர் எல்லோருக்குமான முதல்வராக நடந்துகொண்டாலும், திமுகவின் மூத்த தலைவர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் எதிர்க்கட்சியாகவே எங்களை பார்க்கிறார்கள்.

ஒரு மாநில முதல்வருக்கு எங்கள் கட்சி எப்போதும் மரியாதை கொடுக்கும். ஸ்டாலினும் எல்லோரிடத்திலும் இணக்காம செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவருக்கு கீழே இருப்பவர்கள் முரண்பாடாக நடந்துகொள்கிறார்கள். திமுக செய்தி தொடர்பாளர்கள் எங்களிடத்தில் காழ்ப்புணர்ச்சியுடனேயே நடந்துகொள்கிறார்கள்.

’’முதல்வருக்கு கட்சியினர் கட்டுப்படவில்லையா? ’’

முதல்வர் எல்லோரையும் அனுசரித்து பேசுகிறார். ஆனால் திமுகவினர் மாறாக நடந்துகொள்கிறார்கள் என்றால், முதல்வருக்கு கட்சியினர் கட்டுப்படவில்லையா? என்ற கேள்வி எழுகிறது என்கிறார்.