செல்போன் பேச, டிவி பார்க்க தடை: விரக்தியால் ஒரு குடும்பமே எடுத்த விபரீத முடிவு

 

செல்போன் பேச, டிவி பார்க்க தடை:  விரக்தியால் ஒரு குடும்பமே எடுத்த விபரீத முடிவு

செல்போன் பேச முடியாத, டிவி பார்க்க முடியாத விரக்தியால் ஒரு குடும்பமே விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்போன் பேச, டிவி பார்க்க தடை:  விரக்தியால் ஒரு குடும்பமே எடுத்த விபரீத முடிவு

கொரோனா ஊரடங்கில் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல். வீட்டில் இருந்தபடியே கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு நேரம் போய்விடும். மற்றபடி வேலைக்கு செல்ல வழியில்லாமல் ஊரங்கு பொதுமுடக்கத்தினால் வீட்டில் இருப்பவர்களுக்கு செல்போனும், டிவியும்தான் கதி.

அப்படித்தான், திருச்சி துவாக்குடி வ.உ.சி.நகர் நந்தகுமார் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர். அதனால் எல்லா காலங்களிலும் இவருக்கு வேலை இருக்கும். ஊரடங்கினால் மகனும், மகளும் எப்போதும் செல்போனில் மூழ்கி இருந்ததால் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார் நந்தகுமார். போதாத குறைக்கு மனைவிவேறு எந்நேரமும் டிவி பார்த்துக்கொண்டே இருந்ததால் மேலும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் நந்தகுமார்.

செல்போன் பேச, டிவி பார்க்க தடை:  விரக்தியால் ஒரு குடும்பமே எடுத்த விபரீத முடிவு

ஒருநாள் மகன், மகள்களின் செல்போன்கள், டிவி எல்லாவற்றையும் ஒரு பெட்டிக்குள் போட்டு பூட்டி வைத்துவிட்டார்.

நந்தகுமாரின் இந்த செயல் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. இதையடுத்து நந்தகுமார் மனைவி சித்ராதேவி, அரளி விதையினை அரைத்து பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டார்.

மகனும், இளைய மகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டனர். மூத்த மகளும், சித்ரா தேவியும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக நந்தகுமாரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.