Home உலகம் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசி

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசி

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரமே இன்னமும் குறைந்தபாடில்லை. அதற்குள் மூன்றாம் அலை பற்றிய பதற்றம் அதிகரித்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்க இருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசி
மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசி

இந்த கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் குழந்தைகளுக்காக 5 தடுப்பூசிகள் தயாராகி வருகிறது. விரைவில் அந்த ஊசிகள் செயல்முறைக்கு வரலாம் என்று தெரிகிறது. மூன்றாவது அலை நெருங்கி வருவதால் விரைவில் அந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசி

சீனாவில் விரைவில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. சீன அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது. சினோவாக் என்ற தடுப்பூசி மருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்பட இருக்கிறது.

இந்த தடுப்பூசி மருந்து குழந்தைகளின் உடலில் எப்படி செயல்படுகிறது. குழந்தைகளுக்கு பக்கவிளைவுகளை ஏதும் ஏற்படுத்துகிறதா என்பதையறிய நடந்த இந்த தடுப்பூசியின் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்துவிட்டன. முதல், இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்து செலுத்திய பின்னர், மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்ட பின்னரே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சினோவாக் தவிர மேலும் பல தடுப்பு மருந்துகளும் குழந்தைகளுக்காக சீனாவில் தயாராகி வருகிறது.

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசி

விரைவில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, எந்த தேதியில் தொடங்கப்படுகிறது என்று சீன அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

இதன் மூலம், உலகிலேயே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் முதல் நாடாக இணைகிறது சீனா.

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கொரொனா பரவலால் தமிழக பள்ளி, கல்லூரி மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று...
- Advertisment -
TopTamilNews