ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி சம்பந்தம் கொரோனாவால் காலமானார்

 

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி சம்பந்தம் கொரோனாவால் காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பின் வழக்கில் 19 ஆண்டுகள் விசாரணை அதிகாரியாக இருந்த ஜி.சம்பந்தம்(வயது62) கொரோனாவால் உயிரிழந்தார்.

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி சம்பந்தம் கொரோனாவால் காலமானார்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜி. சம்பந்தம். 27.9.1987ல் தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார் சம்பந்தம் மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார்.

1996ல் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீது 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு புகார் எழுந்தது. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான‌ விசாரணை குழு இதை விசாரித்து வந்தது. 3.12.1997ல் இந்த விசாரணைக்குழுவில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர் ஜி.சம்பந்தம்.

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி சம்பந்தம் கொரோனாவால் காலமானார்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை, சொத்துகளின் மதிப்பீடு, அரசு சான்று ஆவணங்கள் உள்ளிட்ட பணிகளில்நல்லம்ம நாயுடுவுடன் இணைந்து செயல்பட்டவர் சம்பந்தம்.

அதிமுக , திமுக ஆட்சிகள் மாறியபோதும் கூட, இந்த வழக்கை நன்கு அறிந்தவர் என்பதால் சம்பந்தம் மட்டும் இரு ஆட்சியிலும் மாற்றப்படாமல் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி கட்டத்தில், சம்பந்தம் ஜெயலலிதா தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்தார்.

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி சம்பந்தம் கொரோனாவால் காலமானார்

இந்த சொத்துக்குவிப்பு வழக்கு 2004ம் ஆண்டில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது விசாரணையை கவனிப்பதற்காக பெங்களூரு அனுப்பப்பட்டார் சம்பந்தம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கிலும் தொடர்ந்து ஆஜரானார் சம்பந்தம்.

சென்னை நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என சொத்துக்குவிப்பு வழக்கில் 19 ஆண்டுகளாக பணியாற்றிய ஜி. சம்பந்தம் 2016ல் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின்னர் அவர் செங்கல்பட்டு அண்ணாநகரில் மனைவி பிச்சையம்மாள், பிள்ளைகள் பாரதி, பார்கவி, முத்துப்பாண்டி ஆகியோருடன் வசித்து வந்தார்.

சம்பந்தத்தின் மூத்த மகள் பாரதி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இரண்டாவது மகள் பார்கவி பைலட் ஆகிவிட்டார். மகன் முத்துப்பாண்டி டாக்டர்.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சம்பந்தம், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். சம்பந்தத்தின் இறுதிச்சங்கு இன்று நடைபெறூகிறது. செங்கல்பட்டு அண்ணாநகரில் உள்ள மின்மயானத்தில் மதியம் 12 அளவில் தகனம் செய்யப்படுகிறது.