Home க்ரைம் பக்கத்து வீட்டுப்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது!

பக்கத்து வீட்டுப்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது!

ஒரு பெண் தான் குளிக்கும் போது தனது பக்கத்து வீட்டுக்காரர் ரகசியமாக பார்த்து வருவதாக புகாரளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ராகுல் பர்மர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்தப் பெண் 181 அபயம் ஹெல்ப்லைனை அழைத்து சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

அந்த பெண் குளித்துக்கொண்டிருந்ததை ராகுல் பார்த்த போது பெண்ணின் மைத்துனரால் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண் குளிக்கச்செல்லும் போதெல்லாம் மொட்டை மாடியிலிருந்து பார்ப்பதை ராகுல் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். பெண்ணின் மைத்துனரும் இதுகுறித்து அவரை எச்சரித்துள்ளார். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் குளிப்பதை ராகுல் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது மைத்துனரால் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.

Rep Image

அதையடுத்து, அந்த பெண் ஆபத்து உதவி மையத்திற்கு போன் செய்து சம்பவத்தைக் கூறியுள்ளார். அதற்கு ‘தாங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்குவோம், நடவடிக்கைகால எடுக்கமுடியாது, காவல்துறையை அணுகுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் ராகுலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!