27 கி.மீ-க்கு மூன்று டோல்கேட்! – மதுரை மக்களின் அவஸ்தை

 

27 கி.மீ-க்கு மூன்று டோல்கேட்! – மதுரை மக்களின் அவஸ்தை

மதுரையில் 27 கிலோ மீட்டர் தூரத்துக்கு மூன்று டோல்கேட் அமைந்திருப்பது மக்களுக்கு மிகப்பெரிய அவஸ்தையாக உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு. பராமரிப்புக்கு என்று வாகனம் வாங்கும்போதே வரி வசூலிக்கப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் சாலை அமைக்க, பராமரிக்க நிதி ஒதுக்கப்படுகிறது.

மதுரையில் 27 கிலோ மீட்டர் தூரத்துக்கு மூன்று டோல்கேட் அமைந்திருப்பது மக்களுக்கு மிகப்பெரிய அவஸ்தையாக உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு. பராமரிப்புக்கு என்று வாகனம் வாங்கும்போதே வரி வசூலிக்கப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் சாலை அமைக்க, பராமரிக்க நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டோல்பிளாஸா அமைக்கப்பட்டு நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது என்றைக்குத்தான் முடிவுக்கு வருமோ என்று தெரியவில்லை. பல ஆண்டு கணக்கில் வசூல் ஜோராக நடந்து வருகிறது. 

tollgate

இந்தநிலையில், மதுரை மக்கள் இதுபோன்ற டோல்களால் சந்திக்கும் அவதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மதுரை உத்தங்குடி – கப்பலூர் வரை 27 கி.மீ தொலைவுக்கு மூன்று இடங்களில் மாநில நெடுஞ்சாலைத் துறை டோல் வசூலிக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த டோல் வசூலிக்கப்படுகிறது. இதற்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ என்று மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறைப்படி நகரத்துக்கு வெளியே ஆறு கி.மீ-க்கு அப்பால்தான் டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்க வேண்டும். டோல் மையங்களுக்கு இடையே குறைந்தது 60 முதல் 75 கி.மீ தூரத்துக்கு இடைவெளி இருக்க வேண்டும். டோல் அமைந்துள்ள பகுதியில் ஆறு கி.மீ சுற்றளவுக்கு வசிப்பவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கப்பட்டு இந்த டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆறு கி.மீ சுற்றளவுக்கு உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது விதி. அதன்படி இங்கேயும் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால், உத்தங்குடியில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு சுங்கச்சாவடியில் மட்டும்தான் அவர்களுக்கு கட்டணம் கிடையாது. அடுத்த மூன்று கி.மீ-ல் அமைந்துள்ள மஸ்தான்பட்டியில் அவர்கள் கட்டணம் செலுத்தியே தீர வேண்டும். இது பற்றி மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமாரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. 

tollgate

டோல் வசூல் செய்யும் இடமும் போதுமானதாக இல்லை. இதனால் வாகனங்கள் தேங்கி கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போதுமான கவுண்டரை ஏற்படுத்தினாலாவது நிம்மதியாக பயணிக்கலாம். குறைந்தபட்சம் தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாஸாக்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபாஸ்டேக் வசதியை இங்கு அறிமுகம் செய்தாலாவது நன்றாக இருக்கும். உள்ளே நுழைந்ததுமே நம்முடைய கணக்கிலிருந்து கட்டணம் எடுத்துவிடுவார்கள். எந்த தொந்தரவுமின்றி நிம்மதியாக பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், அந்த திட்டம் இங்கு எல்லாம் வர வாய்ப்பே இல்லை என்று தெரிகின்றது என்கின்றனர் வாகன ஓட்டிகள்!
இந்த டோல் கட்டணம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டாலும் உரிய பதில் இல்லை. நல்ல சாலை வேண்டும்தான்… அதற்காக எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி கட்டணம் செலுத்துவது… நாம் செலுத்தும் வரி எல்லாம் எங்கே செல்கிறது என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த டோல் கொள்ளை எப்போதுதான் முடியுமோ… அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!