26 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர அழைப்பு

 

26 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர அழைப்பு

தமிழகத்தில் ககொரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு அதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்க 13. 5. 2021 இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

26 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர அழைப்பு

இக்கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 13 கட்சிகளின் சார்பாக 26 பேர் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள்.

முதல்வராக பதவியேற்றது முதல் கொரோனாவின் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறார்.