முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாமகவும் இதைத் தான் வலியுறுத்தியது..ராமதாஸ்

 

முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாமகவும் இதைத் தான் வலியுறுத்தியது..ராமதாஸ்

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் மேலும், மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாமகவும் இதைத் தான் வலியுறுத்தியது..ராமதாஸ்

இதுகுறித்த முதல்வரின் அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதுள்ள விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறை இருப்பதால் அவ்வயதுக்குக் குறைவான, தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது, தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம் என்றும் வல்லுநர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

மாநில கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இந்த அரசு உறுதியாக இருப்பினும், தேர்வினை மேலும் தள்ளிவைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று மருத்துவர்கள் கருதுவதால், அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாமகவும் இதைத் தான் வலியுறுத்தியது..ராமதாஸ்

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்’’என்று தெரிவித்திருக்கிறார்.