ரேடிசன் ப்ளூவில் ஓபிஎஸ் – இபிஎஸ்.. என்ன நடந்தது?

 

ரேடிசன் ப்ளூவில் ஓபிஎஸ் – இபிஎஸ்.. என்ன நடந்தது?

இருவேறு கட்சியினர் கூட்டணிக்கு முன்னர் ஓட்டலில் சந்தித்து பேசுவது வழக்கம். அதுவே கூட்டணிக்கு பின்னர் அவரவர் வீடுகளில் சந்தித்து பேசிக்கொள்வார்கள். ஆனால் ஒரே கட்சியின் இரண்டு மூத்த நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தாமல், அவரவர் வீட்டிலும் ஆலோசனை நடத்தாமல் தனியார் ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது அதிமுகவினரிடையேயான சலசலப்பை அதிகப்பத்தியிருக்கிறது.

ரேடிசன் ப்ளூவில் ஓபிஎஸ் – இபிஎஸ்.. என்ன நடந்தது?

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தினை ஓபிஎஸ் புறக்கணித்ததும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது உறுதியானது என்றனர் அதிமுகவினர். ஓபிஎஸ் இந்த கூட்டத்தினை புறக்கணித்ததற்கு சொல்லப்படும் பல்வேறு காரணங்களில் ஒன்று, தன்னை கேட்காமல் எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுப்பதால்தான் என்கிறார்கள்.

சசிகலா ஆடியோ விவகராத்தில் சேலத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் மட்டும் ஆலோசனை நடத்திவிட்டு, தேனியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை நடத்தாமல் சசிகலா ஆடியோ குறித்த விளக்கத்தினை அளித்தார் கே.பி.முனுசாமி. இதனால் ஓபிஎஸ் டென்ஷனில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு இருந்தது.

ரேடிசன் ப்ளூவில் ஓபிஎஸ் – இபிஎஸ்.. என்ன நடந்தது?

இந்நிலையில்தான் அவர் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தினை புறக்கணித்தார். ஓபிஎஸ்சின் புறக்கணிப்பால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் -இபிஎஸ் இருக்கும் இடையே மோதலா என்ற கேள்விகளுக்கு, அவருக்கும் எனக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று சமாளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதன்பின்னர், மீண்டும் ஆலோசனை கூட்டத்தினை நடத்தி அதில் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரையும் பங்கேற்க வைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று இபிஎஸ் தரப்பில் முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதற்கு, அதிகாரத்தில் இருந்தபோதுதான் என்னை எதுவும் கேட்கவில்லை அவர். இப்போது எதிர்க்கட்சியாகத்தானே இருக்கிறோம். இப்போதும் கூட அண்ணனை கேட்காமல் முடிவுகளை எடுத்தால் எப்படி? அதனால்தான் அண்ணனுக்கு கோபம் என்று சொல்லி இருக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

ரேடிசன் ப்ளூவில் ஓபிஎஸ் – இபிஎஸ்.. என்ன நடந்தது?

இதுகுறித்து இருதரப்பும் அதிமுக அலுவலகத்தில் உட்கார்ந்து பேசலாம் என்று ஓபிஎஸ்சை அழைத்தபோது, அவர் கட்சி அலுவலகத்திற்கு வர மறுத்துவிட்டாராம். இதனால்தான் சென்னை எழும்பூரில் உள்ள ரேடிசன் ப்ளூ தனியார் ஓட்டலில் இருவரின் சந்திப்புக்கு ஏற்பாடு நடந்திருக்கிறது.

ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பிலும், அப்பத்தான் என்கிட்ட கேட்கல; இப்பவும் ஏன் என்கிட்ட எதுவும் கேட்கமாட்டேங்குறீங்க? என்று கேட்டிருக்கிறார் ஓபிஎஸ்.