தாடி வைக்க தடை; செருப்பு அணிய தடை; ஜீன்ஸ், டீ-சர்ட்டுக்கும் தடை

தாடி வைக்க தடை; செருப்பு அணிய தடை; ஜீன்ஸ், டீ-சர்ட்டுக்கும்  தடை

சிபிஐ அமைப்பிற்கு 33வது இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வால் பொறூப்பேற்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக்கொண்ட சுபோத்குமார், சிபிஐ உள்கட்டமைப்பை வலுப்படுத்துகின்ற வகையில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்ய முடிவெடுத்திருக்கிறார். சிபிஐ ஊழியர்கள் வழக்கமான உடையினை அணிய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

தாடி வைக்க தடை; செருப்பு அணிய தடை; ஜீன்ஸ், டீ-சர்ட்டுக்கும்  தடை

இதுகுறித்து சிபிஐ ஊழியர்களுக்கு சுபோத்குமார் பிறப்பித்திருக்கும் உத்தரவில், சிபிஐ அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஆண் ஊழியர்கள் முறையான பேண்ட்-சர்ட், ஷூக்கள் அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் , செருப்புகளை யாரும் அலுவலக நேரத்தில் அணியக் கூடாது. மேலும் ஆண்கள் தாடி வைத்திருக்க கூடாது. முழுவதுமாக ஷேவ் செய்திருக்க வேண்டும்.

தாடி வைக்க தடை; செருப்பு அணிய தடை; ஜீன்ஸ், டீ-சர்ட்டுக்கும்  தடை

அதே போல பெண் அலுவலர்கள் புடவை மற்றும் சூட் முறையான சட்டை, பேண்ட்களை அணிந்துகொள்ளலாம்.

இந்த புதிய விதிகள் நாடு முழுவதும் அனைத்து சிபிஐ அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.