ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும் இபிஎஸ்

 

ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும்  இபிஎஸ்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பதவிக்காக மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்ற சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது சசிகலாவின் ஆடியோ.

ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும்  இபிஎஸ்

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாடுபட்டு வளர்த்த கட்சியில் இன்றைக்கு இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நான் வந்து சரி செய்து கட்சியை நல்லபடியாக வழி நடத்துவேன் என்று அந்த ஆடியோவில் சசிகலா தெரிவித்திருந்தார். அதிமுக தொண்டரிடம் சசிகலா செல்போனில் பேசியதுதன் அந்த ஆடியோ என்று சொல்லப்பட்டது. இதன் பின்னர் அடுத்தடுத்து இரண்டு ஆடியோக்கள் வெளியாகின .

ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும்  இபிஎஸ்

இதன் பின்னர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, சசிகலாவிடம் எந்த அதிமுக தொண்டரும் போனில் பேசவில்லை. அமமுகவினரிடம் மட்டுமே அவர் பேசியிருக்கிறார். அந்த ஆடியோக்கள் தான் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சசிகலா அதிமுகவில் இல்லை. அவரின் பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் யாரும் செவிசாய்க்க மாட்டார்கள். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று சசிகலா நினைக்கிறார் ஒரு போதும் அவரது எண்ணம் நிறைவேறாது. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால் சசிகலாவும் அவரது குடும்பமும் அதிமுகவிற்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்றும் பரபரப்பு விளக்கத்தினை அளித்திருந்தார்.

ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும்  இபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமி இடம் ஆலோசனை செய்து விட்டு அதன் பின்னர் தான் கே.பி. முனுசாமி சசிகலாவின் ஆடியோ குறித்து இந்த விளக்கத்தை அளித்தார் என்று தகவல் பரவியது. அப்படி என்றால் பன்னீர்செல்வத்திடம் அவர் ஏன் ஆலோசனை செய்யவில்லை என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. சசிகலா விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் அவருக்கு ஆதரவு நிலையை எடுத்திருக்கிறாராம். இதனால்தான் அவரிடம் கலந்தாலோசிக்காமல் எடப்பாடியிடம் மட்டும் ஆலோசித்துவிட்டு சசிகலா ஆடியோ குறித்து விளக்கமளித்தார் கேட்டு முனுசாமி என்ற பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்றைக்கு சென்னையில் நடந்த நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடி பன்னீர்செல்வம் மட்டும் அதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் தேர்வு தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினர். தேர்தல் முடிந்து இத்தனை நாள் ஆன பின்னரும் கூட தேர்தல் தோல்வி பற்றி ஆலோசிக்காமல் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் பதவியிலேயே குறியாக இருக்கிறார்கள் என்ற சலசலப்பு அதிமுகவினரிடையே எழுந்த நேரத்தில்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது.

ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும்  இபிஎஸ்

இக்கூட்டத்தை ஓ பன்னீர்செல்வம் புறக்கணித்திருப்பதன் மூலம் ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் உச்ச கட்டத்திற்கு வந்திருக்கிறது என்பது தெரிகிறது என்கிறார்கள்அதிமுகவின் சீனியர்கள் சிலர். சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவாக இருக்கிறார் அவரை கட்சிக்குள் கொண்டுவர படு தீவிரமாக இருக்கிறார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது உண்மைதான் என்கிறார்கள் அந்த சீனியர்கள்.

தொண்டர்களிடையே பேசிவரும் சசிகலா ஓ பன்னீர்செல்வத்திடமும் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேரிடம் சசிகலா தொலைபேசியில் பேசியிருக்கிறார் ஓபிஎஸ் மற்றும் அந்த முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேரும் சசிகலா மீண்டும் அதிமுகவிற்கு வந்து பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்கின்றனர்.

ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும்  இபிஎஸ்

இதையடுத்துதான் சசிகலா அடுத்தடுத்து தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுவரைக்கும் நாலு ஆடியோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, தனக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்கிறார். இன்று ஓபிஎஸ் அதிமுகவில் ஆலோசனைக் கூட்டத்திற்கு வராதது குறித்து, அவர் புது வீட்டிற்கு சென்றிருப்பதால் கிரகப்பிரவேசத்தினால் ஆலோசனைக் கூட்டத்திற்கு வர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை கட்சியினரே நம்ப மறுக்கின்றனர். ஓ. பன்னீர்செல்வம் புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யும் நாளில் தான் அதிமுகவின் ஆலோசனைக்கூட்டத்தினை வைக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இல்லை அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிந்தும் தன் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் இந்த நாளில்தான் செய்ய நினைப்பாரா ஓபிஎஸ். இது எல்லாமே ஓ. பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையேயான பிளவை காட்டுகிறது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.

ஓபிஎஸ்-ஐ தடுத்த சசிகலா: ஏமாந்து நிற்கும்  இபிஎஸ்

சசிகலா பக்கம் ஓபிஎஸ் முழுமையாக சாய்ந்து விடாமல் தடுக்கத்தான் இந்த ஆலோசனை கூட்டத்தையே கூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மூளைச்சலவை செய்துவிடுவார்கள் என்றுதான் எச்சரிக்கையாக, தடுத்துவிட்டார் சசிகலா. இதன்பின்னர்தான் கிரகபிரவேசத்தில் மும்முரமாகிவிட்டார் ஓபிஎஸ். அவர் நினைத்திருந்தால் கிரகபிரவேசத்தை முடித்துவிட்டு வந்திருக்கலாம். ஆனால் புறக்கணித்துவிட்டார். எதிர்ப்பார்ப்பிலிருந்த எடப்பாடிதான் ஏமாந்து நின்றார் என்கிறார்கள்.