மோடி,ரஜினிகாந்த் மதுரை செல்ல இ-ரிஜிஸ்தர் அனுமதி

 

மோடி,ரஜினிகாந்த் மதுரை செல்ல இ-ரிஜிஸ்தர் அனுமதி

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோ சென்னையில் இருந்து இன்று 4.6.2021க்கு இ.ரிஜிஸ்தரில் அனுமதி கிடைத்திருக்கிறது.

மோடி,ரஜினிகாந்த் மதுரை செல்ல இ-ரிஜிஸ்தர் அனுமதி

ஊரடங்கில் முக்கிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்றும், இ.ரிஸ்தர் செய்துகொண்டால் மண்டலம் விட்டு மண்டலம் செல்லலாம் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த இ.ரிஜிஸ்தர் முறையில் குளறுபடி இருப்பதாகவும், இதை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் சாலையில் சென்று வருகின்றன என்றும் தெரியவந்திருக்கிறது.

இதை உறுதி செய்துகொள்ள, பிரதமர் மோடி பெயரில் சென்னையில் இருந்து மதுரை செல்ல, அதுவும் மதுரையில் இல்லாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வதாக தமிழக அரசின் இ-ரிஜிஸ்தர் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள். மோடி மதுரை செல்வதாகவும், அவருடன் அமித்சா செல்வதாகவும், வாகனத்தின் ஓட்டுநராக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செல்வதாக பதிவு செய்திருக்கிறார்கள்.

மோடி,ரஜினிகாந்த் மதுரை செல்ல இ-ரிஜிஸ்தர் அனுமதி

பயணம் நாள், தொலைபேசி எண், வாகன எண் என்று அனைத்தையுமே போலியாக உள்ளிடு செய்திருக்கிறார்கள். அரசு அடையாள அட்டை என்ற இடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்திருக்கின்றார்கள். இதை எல்லாவற்றையுமே ஏற்றுக்கொண்டு, 4ம் தேதியான இன்றைக்கு மோடி, அமித்ஷ்சா மதுரை செல்லவும், செல்லூர் ராஜூ வாகனம் ஓட்டவும் இ ரிஸ்தர் அனுமதி அளித்திருக்கிறது.

மோடி,ரஜினிகாந்த் மதுரை செல்ல இ-ரிஜிஸ்தர் அனுமதி

அடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தனது பி.எம்.டபிள்யூ காரின் மூலம் சென்னையில் இருந்து மதுரை செல்வது போல பதிவு செய்திருக்கிறார்கள். முகவரி, தொலைபேசி எண், மதுரை செல்லும் இடம் எல்லாவற்றையும் போலீயாகவே கொடுக்க, அதை ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்திருக்கிறது இ.ரிஜிஸ்தர்.

இ ரிஸ்தர் பதிவு முறையாக கவனிக்கப்படாமல் இருப்பதால் இதுபோன்று பொதுமக்கள் ஈஸியாக இ ரிஸ்தர் செய்துகொண்டு சாலைகளின் வாகனங்களில் பறக்கின்றனர். இதை ஒழுங்குபடுத்த வேண்டுமென்கின்றனர்.