எடப்பாடியே சசிகலாவை ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன்… கே.பி.முனுசாமி ஆவேசம்

எடப்பாடியே சசிகலாவை ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன்… கே.பி.முனுசாமி ஆவேசம்

ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் என்று பேசப்பட்டு வந்த கேபி முனுசாமி இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரக மாறிவிட்டார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் உண்மையில் தான் யாருடைய ஆதரவாளரும் இல்லை என்று தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம் கேபி முனுசாமி.

எடப்பாடியே சசிகலாவை ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன்… கே.பி.முனுசாமி ஆவேசம்

சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் இருந்ததால்தான் தன்னுடன் ஓபிஎஸ் இணைந்ததாகவும் சசிகலாவுக்கு எதிராக தான் எப்போதும் குரல் கொடுத்து வந்ததால் தான் அதைப் பின்பற்றி ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்றும் ஆதரவாளர்களிடம் தெரிவித்து வருகிறாராம் முனுசாமி.

எடப்பாடியே சசிகலாவை ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன்… கே.பி.முனுசாமி ஆவேசம்

சசிகலாவை எதிர்க்கும் முடிவிலிருந்து பின்வாங்கி அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று தகவல் வந்த வண்ணம் இருப்பதால் ஓ. பன்னீர் செல்வத்திடம் இருந்து தான் விலகி, சிகலா விஷயத்தில் எதிர்ப்பு நிலையை எடுத்ததால் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தற்போது நிற்பதாகவும் அவர் தெரிவித்து வருகிறாராம்.

எடப்பாடியே சசிகலாவை ஆதரித்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன்… கே.பி.முனுசாமி ஆவேசம்

சசிகலா மீண்டும் கட்சியை கைபற்ற நினைப்பதாக ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா கட்சிக்குள் வர ஓ. பன்னீர்செல்வம் ஒரு காரணமாக இருந்து விடுவார் என ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம் முனுசாமி. எடப்பாடிபழனிச்சாமி சசிகலா பக்கம் சாயமாட்டார் என்றே நம்புகிறேன். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமியே சசிகலா அதிமுகவிற்கு வர சம்மதித்தாலும் தான் சம்மதிக்க மாட்டேன். மீண்டும் சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி வந்து அதிமுகவினர் அடிமையாக இருப்பதை ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன் என்றும் தனது ஆதரவாளர்களிடம் ஆவேசமாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம் முனுசாமி.