மிஸ் யூ அப்பா… குஷ்பூ

 

மிஸ் யூ அப்பா… குஷ்பூ

நடிகை குஷ்புவுக்கு திமுகவில் நல்லதொரு வாய்ப்பினை வழங்கியதோடு அல்லாமல் கட்சியில் அதிக முக்கியத்துவத்தையும் வழங்கி இருந்தார் கருணாநிதி. தமிழகம் முழுவதும் சுற்றி திமுகவுக்கு தீவிர பிரச்சாரம் செய்து வந்தார் குஷ்பு.

கட்சியில் முக்கிய பொறுப்பு அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார். அங்கிருந்து இப்போது பிஜேபிக்கு சென்றுவிட்டாலும், கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நினைக்காத நாளில்லை என்கிறார் குஷ்பூ.

மிஸ் யூ அப்பா… குஷ்பூ

கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ் யூ அப்பா… குஷ்பூ

பாஜக பிரமுகரான குஷ்பூ, ‘’ நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நான் உணராத நாள் இல்லை. ஒரு நாள் கூட தவறாமல் அதை நினைக்கிறேன். ஒரு குரு என்பவர் கடவுளுக்கு மேலே. நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன். மிஸ் யூ அப்பா.’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.