உலகமே நெகிழும்படி சொந்த ஊருக்கு திரும்பியும் பாசமகள் ஜோதி குமாரியை சோகத்தில் ஆழ்த்திய மோகன்பஸ்வான்

உலகமே நெகிழும்படி சொந்த ஊருக்கு திரும்பியும் பாசமகள் ஜோதி குமாரியை சோகத்தில் ஆழ்த்திய மோகன்பஸ்வான்

பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாததால் கால் நடக்க முடியாத தந்தையுடன் 1200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து ஊர் திரும்பிய பாசமகள் ஜோதிகுமாரியை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறார் மோகன்பஸ்வான். மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.

உலகமே நெகிழும்படி சொந்த ஊருக்கு திரும்பியும் பாசமகள் ஜோதி குமாரியை சோகத்தில் ஆழ்த்திய மோகன்பஸ்வான்

பீகார் மாநிலம் தார்பங்கா கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அரியானா மாநிலம் குர்கவானில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 26.1.2020ல் மோகனுக்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மோகன்பஸ்வானின் மனைவியும், 15வயது மகள் ஜோதிகுமாரியும் மருத்துவனைக்கு சென்று பஸ்வானை பார்த்துக்கொண்டனர்.

பஸ்வானின் மனைவி அங்கன்வாடியில் சமையல்பணி செய்து வந்ததால், அது நிமித்தமாக 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு, மகளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஊர் திரும்பிவிட்டார்.

உலகமே நெகிழும்படி சொந்த ஊருக்கு திரும்பியும் பாசமகள் ஜோதி குமாரியை சோகத்தில் ஆழ்த்திய மோகன்பஸ்வான்

மோகன்பஸ்வான் குணமடைந்து வந்தநிலையில், திடீரென கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கம் ஏற்பட்டுவிட்டது. இதனால் குர்கோவனில் மகளுடன் தங்கியிருந்தார் மோகன்பஸ்வான். விபத்தில் தந்தை கால் நடக்க முடியாத நிலையில், வருமானம் இழந்து, ஊரடங்கினால் வேறு பெரிதும் சிரமப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பிவிட நினைத்திருக்கிறார் ஜோதிகுமாரி.

பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், சைக்கிளிலேயே ஊர் திரும்புவது என்று முடிவெடுத்த ஜோதிகுமாரி, கால் நடக்க முடியாத தந்தையை அமரவைத்து, சைக்கிளை ஓட்டிக்கொண்டு, 7 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து 1200 கிலோ மீட்டர் கடந்து, கடந்த 17ம் தேதி அன்று சொந்த ஊரை அடைந்தார்.

உலகமே நெகிழும்படி சொந்த ஊருக்கு திரும்பியும் பாசமகள் ஜோதி குமாரியை சோகத்தில் ஆழ்த்திய மோகன்பஸ்வான்

1200 கிலோமீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற மகளின் வீடியோ இணையங்களில் வைரலானது. உலகமே ஜோதி குமாரியை பாராட்டி நெகிழ்ந்தது. அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1200 கிலோ மீட்டர் தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

உலகமே நெகிழும்படி சொந்த ஊருக்கு திரும்பியும் பாசமகள் ஜோதி குமாரியை சோகத்தில் ஆழ்த்திய மோகன்பஸ்வான்

1200 கிலோ மீட்டர் சைக்கிளிளில் பயணம் செய்த செய்தி, திடீர் பொதுமுடக்கத்தின் அவலத்தையும் காட்டியது. அம்மாநில அரசியல் கட்சிகள் ஜோதிகுமாரியின் வீட்டிற்கு நிதியுதவிகளும் செய்தன.

இந்நிலையில், நேற்று காலையில் மோகன் பஸ்வான் மாரடைப்பினால் உயிரிழந்தார். தந்தையை இழந்து நிற்கும் பாசமகள் ஜோதிகுமாரிக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.