நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம்… கடுமையாக சாடிய காங். எம்.பி.

 

நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம்… கடுமையாக சாடிய காங். எம்.பி.

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சி ஆட்சி பொறுப்பேற்று, கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், பக்கத்து மாநிலமான புதுச்சேரியின் நிலைமை இதற்கு நேர் மாறாக இருக்கிறது. பாஜக கூட்டணியுடன் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றும், என்.ஆர். காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி மட்டுமே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இன்னும் அமைச்சரவை பட்டியல் வெளியாகவில்லை.

நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம்… கடுமையாக சாடிய காங். எம்.பி.

புதுச்சேரியில் புதிய அரசு இன்னும் முழுவதுமாகப் பொறுப்பேற்கவில்லை என்பதால், கொரோனா பணிகள் முடங்கி புதுச்சேரி மக்கள் இன்னலுக்குள்ளாவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஆரம்பத்தில் இருந்தே ஆட்சியில் பங்கு என்ற எதிர்பார்ப்பில் இருந்தது போக, முதல்வர் பதவியையே பறிக்கப்பார்க்கிறது பாஜக என்று பரபரப்பு பேச்சு எழுந்த நாளில் இருந்து உஷாராகிவிட்டார் என்.ரங்கசாமி. இதனால் பாஜகவுக்கு அவர் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். அமைச்சரவையில் இடம் கேட்டும், சபாநாயகர் பதவி கேட்டும் பாஜக நெருக்கடி கொடுப்பதால், இதை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கிறது ரங்கசாமிக்கு.

நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம்… கடுமையாக சாடிய காங். எம்.பி.

பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையேயான இந்த பிரச்சனையினால் புதுச்சேரியில் அரசு முழுமையாக செயல்படாததால், கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரிக்கிறது என்றும், மக்களின் இறப்பு எண்ணிக்கை கூடுகிறது என்று குற்றம் சுமத்துகிறார் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம்.

நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம்… கடுமையாக சாடிய காங். எம்.பி.

அவர் மேலும், ‘’ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் களத்தில் இல்லாததால் யாரை சந்திப்பது என்று மக்கள் தவித்து வருகிறார்கள். ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுத்தவர்களோ அந்த மக்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு உரிய பதவியை கேட்டு பெறட்டும். அது அவர்களது உரிமை. அதற்காக மக்களை மறந்துவிடுவதா? நாற்காலியின் மீதுள்ள வெறித்தனம் மக்கள் சேவை மீது இல்லையே’’ என்று கவலை தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும், பாதிக்கப்பட்டோர்களை கூட சந்திக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட அரசு செயல்படவில்லை. இதற்கெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று என்.ரங்கசாமிக்கு அறிவுறுத்துகிறார்.